English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
contabescence
n. மலர்த்துகளைக் கருவிலழிக்கும் நோய்க் கோளாறு.
contabescent
a. தேய்ந்து அழிகின்ற, வழங்கா உறுப்புக்கள் சத்துக் குறைந்து வாடிவதங்கிப் போகின்ற, பூந்தாது உற்பத்தியற்ற.
contact
n. தொடுநிலை, தொக்கு, தொடக்கு, சந்திப்பு, இணைவு, தொடர்பு, கூட்டுறவு, நெருங்கிய பழக்கம், இணைக்கும் பொருள், மின்தாவுவதற்குப் போதிய நெருக்கம், மின் தொடர்பு, (வடி.) வெட்டி மேற்செல்லாமல் கோட்டுடன் கோடு கூடுகை, (மரு.) தொற்றுக்குரிய நெருக்கம், தொற்றிணைப்பு, தொற்றிணைப்பாளர், (வி.) தொடர்பு கொள், தொடர்பை ஏற்படுத்து, பற்றிணைப்புக்கொள், பற்றிணைப்பு உண்டுபண்ணு.
contact-lens
n. கண் பார்வைக்கோளாறு திருத்தக் கண் விழியோடொட்டி அணியப்படும் குழைமக் கண்ணாடி வில்லை.
contadino, n. pl. contadini, fem. Contadina.
(இத்.) இத்தாலி நாட்டுப்புறத்தவன்.
contagion
n. தொற்று, ஒட்டுவாரொட்டி நோய், தொற்றுதல், தொற்று நச்சுக்கூறு, தொற்றுக்கருவி, ஒழுக்கங்கெடுக்கும் பண்பு, நச்சொழுக்கம் பரப்பும் பண்பு, தீமை பரப்பும் ஆற்றல்.
contagionist
n. ஒரு நோய் தொற்றக்கூடியது என்ற கோட்பாட்டாளர்.
contagious
n. தொற்றும் தன்மையுடைய, தொடர்பினால் ஒட்டிக்கொள்ளக்கூடிய, தொற்றிநோய் கொண்டு செல்கிற, தொற்றுப்பரப்புகிற.
contain
v. தன்னகம் கொண்டிரு, உட்கொண்டிரு, உள் அடக்கி வை, கட்டுப்படுத்திக்கொண்டிரு, கடுத்து நிறுத்து, உள்ளடக்கமாகக் கொண்டிரு, முழு அடக்கமாகக் கொண்டிரு, (கண.) சரிசினை எண்ணாகக் கொண்டிரு, (வடி.) சூழ்ந்து கவி, வளைத்திரு.
container
n. கொள்கலம், உட்கொண்டிருக்கும் ஏனம், சரக்குகளை வைத்து அனுப்புதற்குரிய கடகம், பொதியுறை, வளி அடக்கிய புட்டில்.
containment
n. நிலைமை தௌிவு பெறும் வரை எதிரியைத் தாக்குக் காட்டி வைத்திருக்கும் சூழ்ச்சி நயம், நேசவுறவு அவாவித தன் வலிமை வளர்த்துக்கொள்ளும் அரசியல் கோட்பாடு நயம்.
contaminate
a. மாசுபடுத்தப்பட்ட, (வி.) கறைப்படுத்து, தூய்மை கெடு, தொற்று உண்டுபண்ணு, ஒன்றுபட்டுக் கல.
contamination
n. கறைப்படுத்தல், தூய்மைக் கேடு, ஒன்று சேர்த்தல், கலத்தல்.
contango
n. அடுத்த கடன் தீர்க்கும் நாள் வரை வாங்கிய சரக்குகளை விற்பவரே வைத்திருப்பதற்குக் கொடுக்கப்படும் தரகு வீழ்ம்.
contango-day
n. தரகுவீதங்கள் நிச்சயிக்கப்படும் நாள்.
conte
n. (பிர.) சிறுகதை இலக்கியத்துறை.
contemn
v. ஏளனமாகக் கருது, மதிப்புக் குறைவாக நடத்து.
contemplate
v. ஆழ்ந்து நினை, சிந்தனை செய், கவனமாகப் பார், கூர்ந்து ஆராய், கருத்துக்கொள், எண்ணு.
contemplation
n. ஆழ்ந்து நினைதல், சிந்தனை, கவனமாகப் பார்த்தல், நோக்கீடுபாடு, சிந்தனைக்குரிய பொருள், எண்ணம், ஈடுபடும் கருத்து.