English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
candlestick
n. மெழுகுதிரி நிலைச்சட்டம்.
candock
n. மஞ்சள் நிற நீர்வாழ் மல ர் வகை, மஞ்சள் நிற அல்லிக் கொடி வகை.
candour
n. ஒருபாற் கோடாமை, நடுவுநிலைமை, வாய்மை, நேர்மை, கரவின்மை, படிறின்மை.
candy
-1 n. கற்கண்டு, (வி.) சர்க்கரை படிவி, சர்க்கரையிலிட்டுப் பதனப்படுத்து, சர்க்கரையை மணிக்கண்டுருவாக்கு, மணியுருவாகு.
candytuft
n. (தாவ.) பெரும்புறவிதழுடைய மலர்க்கொத்துச் செடிவகை.
cane
n. பிரம்பு, சூரல், கரும்பு, மூங்கில் வகை, அடிக்கும் மெல்லிய பிரம்பு, கைத்தடி, அரக்கு-கந்தகம்-கண்ணாடி ஆகியவற்றின் கம்பியுருளை, (வினை.) பிரம்பால் அடி.
cane-apple
n. சிவப்புப் பழங்களைக் கொண்ட மரவகை, சிவப்புப் பழவகை.
cane-bottomed
a. பிரம்பால் பின்னப்பட்ட இருக்கையை உடைய.
cane-brake
n. மூங்கிற் புதர்க்காடு, பிரப்பங்காடு.
cane-chair
n. பிரம்பு நாற்காலி.
cane-fruit
n. பிரப்பம்பழம், மூங்கிற்பழம்.
cane-mill
n. கரும்பு ஆலை.
cane-sugar
n. கரும்புச் சர்க்கரை, கருப்பஞ் சாற்றினின்று எடுக்கப்படும் வெல்லச்சத்து.
cane-trash
n. கரும்பாலை எரிபொருளாகப் பயன்படும் கரும்புச்சக்கை.
Canella
n. கருவாமரம், இலவங்க மரவகை.
canephor
n. (கட்.) தலையிலே கூடையைச் சுமந்திருக்கும் பெண் உருவக்கலைச் சிற்பம்.
canephorus
n. (ல.) கூடையைச் சுமந்து நிற்பது போன்றமைந்த கிரேக்க இளைஞர் அல்லது மகளிர் சிற்பம்.
canescent
a. வெண்மையாக்கும் போக்குடைய, பழமையான.
cang, cangue
சீன இளங்குற்றவாளிகள் கழுத்திற் சுமத்தப்படும் தண்டனைப் பலகை.