English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
canicular
a. அக்கினி நட்சத்திரைச் சார்ந்த, கத்தரி நாளைச் சார்ந்த.
canine
a. நாளைச் சார்ந்த, நாய் போன்ற, பல்வகையில் நாய்க்கிருப்பது போன்ற.
caning
n. பிரம்படி, பிரம்பால் அடித்தல்.
canister
n. தேயிலைப்பெட்டி, குண்டு ரவைப்பெட்டி, அப்பப்பெட்டி.
canker
n. வாய்ப்புண், அரிப்பு எரிப்பு உடைய அழிசீக்கட்டு, மரஞ்செடியினங்களில் தோன்றும் காளான் நோய்வகை, பழமர நோய்வகை, குதிரைகள் காலில் தோன்றும் வீக்கம், நாயின் காதில் வரும் படைநோய், பறவைகளுக்கு வரும் கட்டி, அரிக்கும்புழு, அழிகேடு, (வி.) உள்ளந்தரி, அரித்தழி, இழிவுக்கு ஆளாக்கு, பழியொட்டு, அழி, கேடுபரப்பு, பண்புகெடு, சீர்குலைவூட்டு, ஊழ்த்துப்போ, கெடு.
canker-rash
n. அழற்காய்ச்சல், தொண்டைப்புண் காய்ச்சல்.
canker-worm
n. இலைதளிர்களை அழிக்கும் முட்டைப்புழு.
cankered
a. அரிக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, சீர்குலைவுற்ற, பண்புகுலைவுற்ற, மனக்கசப்புற்ற.
cankery
a. அரித்துத் தின்னுகிற, சாகும் போக்குடைய.
Canna
n. பன்னிற மலருள்ள கல்வாழை வகை, கானா வாழை.
cannabic
a. சணலினைச் சார்ந்த.
cannabin
n. சணல் இனச்செடியின் பிசின் வகை.
canned
a. பெட்டியில் அடைத்த, தகரப்பெட்டிகளில் அடைத்துப் பாதுகாக்கப்பட்ட, இசைவகையில் மீட்டிசைப்பதற்காகப் பதிவு செய்யப்பட்ட.
cannel, cannel-coal
n. எரிமூட்டு நிலக்கரி.
cannelure
n. நீள்வரைப் பள்ளம், துப்பாக்கி குண்டில் சுற்றுவரிப்பள்ளம்.
canner
n. தகர அடைப்புகளில் அடைப்பவர்.
cannery
n. தகர அடைப்புச்சாலை, உணவுப்பொருள்கள் தகர அடைப்புக்களில் வைத்தடைக்கப்படும் இடம்.
cannibal
n. தன்னினந்தின்னி, அரக்கன், (பெ.) தன்னினத்தைத் தின்னுகிற.