English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
corsair
n. பகைவர் கப்பலைக் கொள்ளையிடும் போர்க் கப்பல் தலைவன், கடற்கொள்ளைக்காரன், சூறைக்கப்பல்.
corset
n. மகளிரின் இறுக்கமுடைய விறைப்பான மார்புக்கச்சு, (வி.) கச்சு அணிவி.
corslet
n. கவச உடற்பகுதி, பெண்டிரின் கை நீங்கலான இறுக்கமான மார்புச் சட்டை, (வில.) பூச்சியின் தலைக்கும் வயிற்றுக்கும் இடைப்பட்ட மார்புக்கூறு.
cortege
n. (பிர.) பரிவாரம், பின்செல்லும் ஊழியர் வரிசை, ஊர்வலம், இழிவு ஊர்வலம்.
cortes
n. pl. (ஸ்பா.) ஸ்பெயின் அல்லது போர்ச்சுக்கல் நாட்டின் இருசட்டமன்றங்களுமடங்கிய பேரவை.
cortex
n. உள்ளுரி, செடியினத்தின் உள்மரப்பட்டை, மேலுறை, மூளைமேலுள்ள சாம்பல் நிறப்பொருள், சிறு நீர்ப்பையின் புறப்பகுதி.
cortical
a. (தாவ.) உள்ளுரியைச் சார்ந்த, (வில.) உடலின் புறம் சார்ந்த, உறுப்பின் புறப்பகுதி சார்ந்த.
corticate, corticated
a. மேல்தோலையுடைய, புறத்தோடு போன்ற.
corundum
n. (த.) குருந்தம், வைரத்திற்கடுத்தபடி கடினம் வாய்ந்த கனிப்பொருள் வகை.
coruscant
a. ஒளி வீசுகிற, மின்னுகிற.
coruscate
v. மின்னு, பளிச்சென ஒளிவிடு.
coruscation
n. மின்னுதல், பளபளப்பாக ஒளிவீசுதல், திடீரென வீசும் ஒளி.
coruugated
a. நௌிவுள்ள, திரைந்த.
corvee
n. நிலப்பண்ணையாட்சி முறையில் ஊழியக்கடமை, கூலியில்லா வேலை.
corvette
n. வழித்துணைக் கப்பல், கூட்டத்தை நீர் மூழ்கிக் கப்பலின் தாக்குதலினின்றும் பாதுகாத்துச் செல்லும் வேகமுடைய சிறிய கப்பல்.
corvine
a. காக்காய்-பருந்து இனத்தைச் சார்ந்த.
Corybant
n. சிபீலி என்ற பண்டைக் கிரேக்க பெண் தெய்வத்தின் ஆடலார்ப்பரிப்பு வாய்ந்த வழிபாட்டுக்கு உரிய சமய குரு.
Corybantic
a. முரட்டுத்தனமிக்க உணர்ச்சிப் பெருக்குள்ள.
Corydon
n. நாட்டுப்புறத்தானைச் சுட்டிய குறிப்புப்பெயர்.
corymb
n. (தாவ.) சரிமட்ட முகட்டையுடைய மலர்க்கொத்து.