English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cosset
n. அன்பாக வளர்க்கப்படும் ஆட்டுக்குட்டி, செல்வமாக வளர்க்கப்படும் உயிரினம், (வி.) செல்லங்கொஞ்சு,. சீராட்டி வளர்.
cost
-1 n. விலை, செலவு, செலவுத்தொகை, விலையாகக் கொடுக்கப்பட்ட பணம், (வி.) விலைபெறு, விலை பிடி, செலவாகு.
cost(2), v. Cost
-1 என்பதன் இறந்தகால முற்றெச்ச வடிவம்.
costa
n. விலா எலும்பு, விலா எலும்பு போன்ற அமைப்பு, வடிகுழாய், நாளம், மலைத்தொடர், வண்டின் சிறகின் முன்விளிம்பு, வண்டின் சிறகு விளிம்பினுக்கருகில் உள்ள வலிவூட்டும் இலை நரம்பு போன்ற அமைவு.
costal
n. வண்டு சிறகின் விளிம்பினுக்கு வலியூட்டும் இலை நரம்புபோன்ற அமைப்பு, (பெ.) விலா எலும்பைச் சார்ந்த, உடலின் பக்கத்திலுள்ள.
costard
n. பெரிய ஆப்பிள் பழவகை.
costard-monger
n. ஆப்பிள் முதலிய பழவகை விற்பனையாளர், தள்ளுவண்டியில் பழம் விற்பவர்.
costate, costated
விலா எலும்புள்ள, விலா எலும்பு போன்ற தோற்றமுள்ள.
costean, costeen
சுரங்க வளம் ஆராயக் கனிப்பாறையின் போக்கறியக் குழியெடு.
costive
a. மலச்சிக்கலுள்ள, கைப்படியான, கஞ்சத்தனமுடைய.
costly
a. விலையேறிய, பெருமதிப்புள்ள, பெருஞ்செலவு பிடிக்கிற.
costmary
n. நறுமண இலைகளுக்காகத் தென் ஐரோப்பாவில் வளர்க்கப்படும் மலர்ச் செடிவகை.
costs
n. pl. நீதிமன்ற வழக்குச் செலவுகள்.
costume
n. ஆடை, அங்கி, மாதர் புற உடை, பகட்டணி உடை, உடையின் பாணி, உடையின் புதுமை நயம், விசித்திரமான உடை, வேடிக்கை நடிப்பு உடை, (வி.) உடை வழங்கு, உடையணிவி, உடுத்து.
costumer, costumier
உடை உருவாக்குபவர், உடை விற்பனையாளர்.
cosy
n. தேநீர்க்கல மேல்மூடி, வேகவைத்த முட்டையினைச் சூடாக வைத்திருக்கும் மூடி, (பெ.) சொகுசான, வாய்ப்பாக இன்பநல்குகிற.
cot
-1 n. சிற்றில், குச்சில், (செய்.) குடில்.
cot-town
n. குடிசைத் தொகுதி.
cot(3), n. cotangent
என்பதன் சுருக்கக் குறிப்பு.
cotangent
n. (கண.) கோணத்தின் எதிரிருக்கை, செங்கோண முக்கோணத்தில் சாய்வரைமீது கோணத்தையடுத்த அடிவரை கொள்ளும் சார்பளவு.