English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
counter-time
n. தடை, எதிர்ப்பு, குதிரை தனக்குச் சொல்லிக் கொடுத்தது போல் அடிபோடாமல் எதிர்த்து நிற்றல்.
counter-view
n. எதிரிடை நோக்கு, எதிரெதிர் நோக்கும் நிலை அமைதி, எதிரீடு, மாறுபாடு.
counter-vote
v. எதிராக மொழிச்சீட்டு இடு, எதிர் வாக்களி.
counter-weigh
v. எதிராக நிறு, சமநிறையிடு, சரியீடு செய்.
counter-wheel
v. எதிர்த்திசையில் சுழலு, நேரெதிர்த் திசை திரும்பு.
counter(y)
n. எதிரிடையானது, மாறானது, (இசை.) பண்ணுக்கு முரணிசைவான குரற்பகுதி, (பெ.) எதிரான, மாறான, முரணான, (வி.) எதிர், மறுதலி, எதிராயிரு, முரணு, சதுரங்கத்தில் எதிர்த்தரப்பு எதிர்ப்புக்கு ஆளாகு, குத்துச்சண்டையில் எதிர்த்தாக்குதலைத் தடுத்த வண்ணம் எதிர்த்துத் தாக்கு, (வினையடை) எதிர்வழியாக, எதிர்ப்பக்கமாக, எதிர்த் திசையில், எதிர்த்து.
counteract
v. எதிரிடையாகச் செய், மாறு செய், எதிர்த்துத் தடைசெய், தோல்வியடையச் செய், சமப்படுத்து, மட்டுப்படுத்து, முனைப்பழி.
counteractive
n. எதிரிடையாகச் செய்வது, மாறு செய்பவர், தடைசெய்பவர், (பெ.) எதிரிடையாகச் செய்யும் இயல்புடைய, மாறு செய்யும் குணமுடைய.
counterbalance
n. சரிசம எதிர் எடை, சரிசம எதிர் ஆற்றல், (வி.) சரிசம எதிர் எடையிடு, சரிசம வலிமை காட்டு, ஒத்த எதிர்ச்செல்வாக்கு நிறுவு, சரிஈடு செய்.
counterblast
n. எதிர் முழக்கம், எதிர்ப் பழிப்பு.
counterblow
n. எதிரடி, எதிர்த்தாக்கு அதிர்ச்சி.
counterbond
n. பிணைமுறி இழப்பீட்டு உத்தரவாதச் சீட்டு.
counterbuff
n. தடைத்தாக்குதல், இயக்கத்தை நிறுத்தவல்ல தாக்குதல், எதிர்த்தாக்குதல், இயக்கத்தைப் பின்னிடைய வைக்கும் தாக்குதல், எதிரடி, எதிர்த்தாக்கதிர்ச்சி, தோல்வி, (வி.) எதிர்த்தாக்கு செய், தடை செய்.
counterchange
v. பரிமாற்றம் செய், தலைமாற்று, குறுக்குக்கட்டமிடு, இடமாற்று, கூறுமாற்று.
countercharge
n. எதிர்க் குற்றச்சாட்டு.
countercharm
n. எதிர் மாயம், எதிர்ச் சூனியம், கவர்ச்சி மாற்று, (வி.) எதிர்மாயம் செய், மாயம் கெடு, எதிர்க் கவர்ச்சி செய், கவர்ச்சி முறி.
countercheck
n. தடையெதிர்ப்பு, தடுப்பு, எதிரீடு, இடையூறு, தடங்கல், கண்டனம், அதட்டல், (வி.) இடையூறுகளால் தடைசெய், திட்டு, கண்டி, அதட்டு.
counterdraw
v. நெய்மத்தாள் மீது உருவரைப்படியெடு.
counterfeit
n. போலியானவர், எத்தர், மோசடிக்காரர், போலியானது, போலிநடிப்பு, கள்ளச்சரக்கு, போலி ஏடு, போலி நாணயம், (பெ.) திருட்டுத் தனமாகப் பார்த்துப் பின்பற்றப்பட்ட, போலியான, மோசடியான, கள்ளத்தனமான, (வி.) கள்ளத்தனமாகப் பார்த்துப் பின்பற்று, உரிமையின்றி மேற்கொள், பொய்புனை, மோசடி செய், போலி நடிப்பு நடி, மிகளம் உரு ஒத்திரு.
counterfeiter
n. போலி நடிப்புக்காரர், பொய்க் கையெழுத்திடுபவர்.