English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
counterfeitly
adv. போலியாக, கள்ளத்தனமாக.
counterfoil
n. அடிச்சீட்டு, எதிரிடைப்படி, காசோலை-அஞ்சல்-ஆணை நுழைவுச்சீட்டு முதலிய வற்றின் கையிருப்புச் சரிநேர்படி.
counterfort
n. அணைசுவர், உதை மதில், மோட்டு உதை தாங்கி.
counterlight
n. வண்ணம் வகையில் எதிரொளி, பொருளின் மீது செல்லும் ஒளியின் அமைவு குலைக்கும் பிறிதோர் ஒளி.
countermand
v. எதிர்க்கட்டளை, மாற்று உத்தரவு, (வி.) எதிர்க்கட்டளை இடு, உத்தரவை மாற்று.
countermarch
n. படையணி எதிர்ச் செலவு, அணி திருப்பம், படைத்துறைப் பயிற்சிமுறையில் அணிமாறாத் திசைத் திருப்பம், (வி,) அணிவகுத்துப் பின்திரும்பிச் செல், அணி திரும்பு.
countermark
n. கூட்டுச் சிப்பத்தில் தனிக்குறிகளுக்கு மேற்பட்ட குழுவின் சிறப்புப்பொறிப்பு, மேலும் பாதுகாப்பை உறுதி செய்வதற்குரிய மேற்பொறிப்பு, ஆக்குவோர்க் குறியீட்டுக்குப் புறம்பான தரச் சான்றுக்குறி, குதிரை வயதை மறைக்கப் பற்களில் இடப்படும் பள்ளக் குறி.
countermine
n. எதிர்ச் சுரங்கம், முற்றுகையாளர்களின் சுரங்கத்தைத் தடுத்தழிப்பதற்காகச் செய்யப்படும் சுரங்கம், எதிர்ச் சதி, எதிர்ச் செயல் வகை, (வி.) எதிராகச் சுரங்கம் அமை, எதிர்ச்சுரங்கம் அமைத்து எதிர்த்து நில், எதிர்ச் சூழ்ச்சி செயலால் தடு.
countermure
n. பின்னணிக் காப்பரண் மதில், மதிலை வலுப்படுத்தப பின் எழுப்பப்படும் மதில், முற்றுகையாளர் எதிர் மதிலரண்.
counterpane
n. படுக்கை விரிப்பு.
counterpart
n. எதிரிணை, சரி எதிர்ப்பகுதி, சரி நிரப்புக்கூறு, குறை ஈடு செய்யும் கூட்டாளி, மறுபடிவம், சரிநேர் படிவம், சரிநேர் அலுவர்.
counterplea
n. வழக்கில் எதிர்வாதம், எதிர்க்குறையீடு, வேண்டுகோளுக்கு மறு வேண்டுகோள்.
counterplead
v. எதிர்மாறாக வழக்காடு.
counterplot
n. எதிர்ச் சதி, எதிர்ச் சூழ்ச்சி, (வி.) சூழ்ச்சி அழிக்க எதிர்ச் சூழ்ச்சி செய், எதிர்ச் சூழ்ச்சி செய்தழி.
counterpoint
n. (இசை.) பண்ணிசைவுத்திறம், உடன் துணைப்பண்திறம், விதிமுறையான பண்மிசைப் பண்.
counterpoise
n. சமன்படுத்தும் எதிர் எடை, சரி எதிராற்றல், சரி சமநிலை, சரி ஒப்புநிலை, (வி.) சரி எதிர் எடையிடு, சரிசம ஆற்றலுடன் எதிர்ப்புச் செய், சமநிறையாக்கு, குறைபாடு ஈடு செய், சரி ஒப்பு நிலைக்குக் கொண்டுவா.
counterscarp
n. முற்றுகையாளர் பக்கமுள்ள அகழியின் புறக்கரை.
countershaft
n. இயந்திரசாலையில் தலைமையான சுழல் அச்சினால் ஓட்டப்படும் இடைச்சுழல் அச்சு.
countersign
n. காவலாளர்களுக்கு நுழைவு அனுமதிப்பதற்காகக் கொடுக்கப்படும் அடையாளச் சொல், ஆள் அடையாளம் காட்டும் குறி, (வி.) கையொப்பமிட்ட ஆவணத்தில் மேற் கையொப்பமிடு, உறுதி செய், உறுதிக் கையொப்பமிடு.
countersink
v. திருகாணித்தலைப்புப் பதியும்படி துளையின் விளிம்பினைச் சுற்றிச் சரிவாகப் பள்ளம் செய்.