English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
criticism
n. திறனாய்வு, நடுநிலைமதிப்பீடு, இலக்கிய ஆராய்ச்சித்துறை, கவின்கலை ஆராய்ச்சி, திறனாய்வுக் கட்டுரை.
criticize
v. குணங்குறை விளக்கங் கண்டு மதிப்பிடு, நுண்ணிதின் ஆய்ந்து வாதாடு, குற்றங்காண், குறைகூறு, கண்டி.
critique
n. தனி ஏடு பற்றிய திறனாய்வுக் கட்டுரை, ஆராய்ச்சிக்கட்டுரை, திறனாய்வுக் குறிப்பு, அறிவாராய்ச்சிக் கலை.
crme
n. (பிர.) பாலேடு, பாலேடுள்ள பொருள்கள்.
Cro-Magnon
n. பிரான்சிலுள்ள குரோமன்யான் குகை, (பெ.) குரோமன்யான் குகையில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுக்கு முற்பட்டகால மனித எலும்புக் கூட்டுப் பகுதிக்குரிய நெட்டையான நீள்மண்டையோட்டு ஐரோப்பிய இனம் சார்ந்த.
croak
n. கரகரப்பான ஒலி, தவளை கத்தும் ஓசை, அண்டங்காக்கைக் கரைவு, (வி.) தவளையின் கத்தும் ஓசை எழுப்பு, அண்டங் காக்கையின் கரைவொலி எழுப்பு, கரகரப்பான ஒலிசெய், அடித்தொண்டையில் பேசு, புலம்பு, முணுமுணுப்புச்செய், கேட்டின் முன்னறிகுறி காட்டு.
croaker
n. கரகர ஒலி எழுப்புபவர், கத்துவது, முணுமுணுப்பவர், கேட்டினை முன்னறிவிப்பவர்.
Croat
n. குரோஷியா இனத்தவர்.
croceate, croceous
செம்மஞ்சள் நிறமான.
crochet
n. கொக்கி ஊசியைக்கொண்டு இழைக்கண்ணிகள் இட்டுச் செய்யப்படும் வலைப்பின்னல் வேலை, கொக்கி ஊசியைக்கொண்டு பின்னப்படும் பொருள், (வி.) கொக்கி ஊசியைக்கொண்டு இழைவலைப்பின்னல் பின்னு, கொக்கி ஊசியைக்கொண்டு சால்வை பின்னு.
crocidolite
n. நீலக் கல்நார், தென் ஆப்பிரிக்காவிலுள்ள நீலக் கல்நாரின் மஞ்சள்நிற உருத்திரிபு வகை.
crock
-1 n. மண்குடம், சாடி, ஒட்டுச்சில்லு, பூத்தொட்டயிலுள்ள துளையை மூடுவதற்காகப் பயன்படும் உடைந்த மட்பாண்டத் துண்டு, (பே-வ.) உலோகக் கலம்.
crockery
n. மட்பாண்டத் தொகுதி, சுட்ட களிமண் கலங்களின் தொகுதி.
crocket
n. (க-க.) கோபுரம் போன்ற கட்டுமானச் சரிவில் செய்யப்படும் இலை-பூச்சுருள் ஒப்பனை வேலைப்பாடு.
crocodile
n. முதலை, முதலை இன விலங்கு வகை, பதனிட்ட முதலைத் தோல், பள்ளி மாணவர் இரண்டிரண்டுபேராக நடந்து போகும் அணி.
crocodility
n. (அள.) குற்றங்காணும் நோக்குடன் வாதிடல்.
Crocodilus
n. (வில.) முதலைகள் உள்ளிட்ட ஊரும் விலங்கினம்.
crocus
n. (தாவ.) மஞ்சள் அல்லது ஊழ் நிற மலர்கடைய சிறு பூண்டுச்செடி வகை, மஞ்சள் அல்லது சிவப்பு நிறமுள்ள பழங்கால வேதியியல் தூள்வகை.
Croeodilia
n. (வில.) முதலைகளும் அவைபோன்ற மரபற்றுப்போன உயிர்களும் உள்ளிட்ட ஊ விலங்குப் பேரினம்.
Croesus
n. பெரும் பணக்காரர்.