English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
crinolette
n. மகளிர் ஆடையின் பின்புறம் நீண்டு விரிந்திருக்கச் செய்யும் அமைவு.
crinoline
n. குதிரை மயிராலும் சணலாலும் செய்யப்பட்ட விறைப்பான பழங்காலத் துணிவகை, விறைப்பாக்கப்பட்ட பெண்டிர் ஆடை, சுற்றிலும் கம்பளியால் ஏந்தலாக்கப்பட்ட மகளிர் உட்சட்டை, நீர்மூழ்கித் தாக்குதலுக்கெதிரான கப்பலின் காப்புச் சூழ்வலை.
crio-sphinx
n. ஆட்டுத்தலைச் சீயாங்கனை, சிங்க உடல்மீது ஆட்டுத்தலை அமைந்த உரு.
cripple
n. நொண்டி, சாளரங்களைத் துப்புரவாக்குவதற்கான சாரம், (பெ.) நொண்டியான, (வி.) நொண்டியாக்கு, ஆற்றல் கெடு, பழுதுபடுத்து, நொண்டிநட.
crippling
n. கட்டிடத்தின் பக்கத்துக்கு இடப்படும் முட்டு.
crisis
n. திரும்புக்கட்டம், கண்டம், அரசியல் திருப்புமையம், வாணிக நெருக்கடி.
crisp
n. முறுகுறுவல், முறுகலாக வறுக்கப்பட்ட காய் கிழங்குச்சீவல், (பெ.) முறுகலான, பொருபொருப்பான, மொறுமொறுப்பான, உரமூட்டுகிற, ஊக்கம் தருகிற, உறுதியளிக்கிற, செயல் விரைவுடைய, விரைந்து முடிக்கிற, சுறுசுறுப்பான, எளிதில் நொறுங்குகிற, குறுகலான, சிறுசிறு துண்டான, சுருட்டையான, சுருண்டு நௌிகிற, அலையலையான, (வி.) சுருட்டையாக்கு, சுருட்டையாகு, அலையலையாக நௌிவி, அலையலைகாகச் செல்.
crispate, crispated
சுருள்சுருளான-அலையலையான தோற்றமுடைய, (தாவ., வில.) அலையலையான விளிம்பினை உடைய.
crispation
n. சுருள்களாகச் செய்தல், சுருள்வு, அலையலையான தோற்றம், அலையலையான இயக்கம், சுருங்குதல், சுரிப்பு.
crisping-iorn, crisping-pin
n. சுருள்களாகச் செய்வதற்கான இரும்புக்கருவி.
crisps
n. pl. முறுகிய உருளைக்கிழங்கு வறுவல், முறுகலாக வறுக்கப்பட்டுச் சிப்பமாக விற்கப்படும் உருளைக்கிழங்குச் சீவல்.
crispy
a. சுருள்களாக உள்ள, மொரமொரப்பான, எளிதில் நொறுங்குகிற, சுறுசுறுப்பான.
criss-cross
n. அரிச்சுவடியின் தொடக்கத்திலுள்ள சிலுவைக்குறி, குறுக்குக்கோடு, குறுக்குக்கோடாக வெட்டிச் செல்லும் இயக்கம், கையெழுத்திடத் தெரியாதவர் இடும் குறுக்கு வெட்டுக்குறி அடையாளம், குறுக்கு மறுக்குக்கட்டம், குறுக்கு வலைப்பின்னல் படிவம், அடுத்தடுத்த குறுக்கீட்டுத் தொடர்ச்சி, ஆட்டவகை, மாறுமாறான குறிக்கோள்களால் வரும் தடுமாற்றம், (பெ.) குறுக்கு மாறுக்கான, குறுக்கு வெட்டுக் கோடுகளாலான, சிடுசிடுப்பான, (வி.) குறுக்குமறுக்காகச் செல், குறுக்குமறுக்குக் கட்டப்படிவத்தில் இழை, அடிக்கடி குறுக்கிட்டுச் செல், (வினையடை) குறுக்கு மறுக்காக, நோக்க முரண்பாட்டுடன், மாறுபட்ட குறிக்கோள்களுடன்.
crista
n. தலைச்சூட்டு, கொண்டை.
cristate
a. (தாவ., வில.) தலைச்சூட்டினையுடைய.
criterion
n. அளவைக்கட்டளை, மூலப்பிரமாணம், ஒப்பளவு முதல், கட்டளைவிதி, பிரமாணசூத்திரம், அடிப்படைத் தத்துவம், தேர்வுமுறை, சோதனை.
critic
n. திறனாய்வாளர், தேர்வறிஞர், நடுநிலையறிஞர், பத்திரிகை மதிப்புரை எழுதுபவர், ஏட்டாராய்ச்சியாளர், பாடபேத ஆய்வாளர், குறைகாண்பவர், கண்டிப்பவர்.
critical
a. திரும்புகட்டம் சார்ந்த, தீர்வுகட்டமான, நெருக்கடியான, இடரார்ந்த, திறனாய்வு சார்ந்த, நுண்ணாய்வுடைய, நடுநிலை மதிப்பீட்டாற்றலுடைய, குற்றங்காண்கிற, கண்டிக்கிற, (கண., இய.) மாறுகட்டம் குறித்த, மாறுநிலையிலுள்ள.
criticaster
n. கீழ்த்தரத் திறனாய்வாளர்.