English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cross-bow
n. குறுக்குவில், கணை அல்லது கல் எறிவதற்காக இடைக்காலத்திற் கையாண்ட வில் போன்ற படைக்கலப் பொறி.
cross-bower, cross-bowman
n. குறுக்குவில் ஏந்திய வீரர்.
cross-breed
n. கலப்பினம், இனக்கலப்பினால் தோன்றிய கான்முளை.
cross-bun
n. கிறித்தவர் விழாநாளாகிய புதுவெள்ளிக் கிழமையன்று உட்கொள்ளப்படும் சிலுவைக்குறியுடைய வட்டப் பொங்கப்பம்.
cross-buttock
n. மற்போர்வீரர் இடுப்புப் பிடிவகை.
cross-correspondence
n. உளவியல் புத்தாய்வுத்துறையில் தனித்தனி பொருளற்ற ஆவி உலகச் செய்திகளை இசைவித்துப் பொருள்கொள்ளும் முறை.
cross-counter
n. குத்துச்சண்டையில் எதிரியின் முதல் தாக்குதலைத் தடுக்க எதிரியின் இடதுகைப்புறமாக வலக்கையும் வலதுபுறமாக இடக்கையும் எதிரெதிர் குறுக்கிடும்படித் தாக்கும் எதிர்த்தாக்கு முறை.
cross-country
a. பாட்டையிலிருந்து விலகி வயல்களின் ஊடாகச் செல்கிற, (வினையடை) பாட்டையிலிருந்து விலகி வயல்களினுடாக.
cross-crosslet
n. நான்கு முனைகளிலும் நான்கு உட்சிலுவைகள் கொண்டுள்ள சிலுவை.
cross-cut
n. குறுக்குவெட்டு, குறுக்கு வழி, (பெ.) குறுக்கு வெட்டுக்காகச் செய்யப்பட்டுள்ள அல்லது பயன்படுத்தப்படுகிற.
cross-division
n. ஒன்றன்மீது ஒன்று கவிந்து மேற் செல்கிற பிரிவுகளாகப் பிரித்தல்.
cross-examination
n. (சட்.) குறுக்கு விசாரணை, குறுக்குக் கேள்வி.
cross-examine
v. (சட்.) குறுக்கு விசாரணைசெய், குறுக்குக் கேள்வி கேள், மறை செய்திகளை வெளிப்படுத்துவதற்காக நுணுக்க விவரமாகக் கேள், எதிர்த்தரப்பின் மீது கேள்வி எழுப்பு.
cross-eyed
a. ஓரக்கண் பார்வையுள்ள.
cross-fertilization
n. (தாவ.) அயல்கருவுறுதல், மாற்றுக் கருவுயிர்ப்பு.
cross-fire
n. (படை.) இரண்டு அல்லது பல முனைகளிலிருந்து செலுத்தப்படும் பீரங்கிக் குண்டுவீச்சு.
cross-gained
a. மரப்பலகை முதலியவற்றில் குறுக்கீடான இழை வரிகளையுடைய, தாறுமாறான இழை வரிகளையுடைய, வேண்டுமென்றே நெறிபிறழ்வான, வழிக்குக் கொண்டுவர முடியாத, முரண்டுபிடிக்கிற, (வினையடை) காழ்ப்பு வரிக்குக் குறுக்கே, வேண்டுமென்றே நெறி பிறழ்வாக, அழும்பாக.
cross-garnet
n. மேல்கீழ்த் திருகுமுனையுடைய கதவுக்கீல்.
cross-grain
n. நுண் இழைவரிக்கெதிரான நுண் இழைவரி.
cross-guard
n. (படை.) வாள்பிடியில் தாக்குக் காப்பான குறுக்குமுளை, பிடிகாப்பு.