English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cross-hatch
v. ஓவியத்தில் வலைகோடுகளிட்டு நிழற்சாயல் காட்டு.
cross-hatching
n. ஓவியத்தில் நிழந்சாயல் காட்டும் வலைக்கோட்டுப்பின்னல்.
cross-head
-1 n. குறுக்குத்தலைப்பு, செய்திதாளில் பத்தியில் வருபொருளைச் சுருக்கமாக உணர்த்தும் இடைத்தலைப்பு.
cross-jack
n. (கப்.) சதுரப் பாய்மரவகை.
cross-legged
a. சப்பணம் போட்டுத் தரையில் அமர்ந்திருக்கிற, கால்மேல் கால் போட்டு நாற்காலியில் அமர்ந்திருக்கிற.
cross-light
n. ஒளிக்கோடு ஒன்றினைக் குறுக்கிட்டுச் செல்லும் மற்றோர் ஒளிவிளக்கம், மற்றொரு கோணத்திலிருந்து பொருளை விளக்குதல்.
cross-over
n. மேற்கவிபாதை, பாதைமேலாகச் செல்லும் பாட்டை.
cross-patch
n. சுடுமூஞ்சிக்காரர், சிடுசிடுப்பானவர்.
cross-piece
n. மற்றொன்றுடன் குறுக்காகப் பொருத்தப் பெற்றுள்ள துண்டு, கப்பலின் முன்பக்கத்திலிருந்து நீண்டுள்ள மரச்சட்டத்தைத் தாங்கும் செங்குத்தான இரண்டு மரக்கட்டைகளை இணைக்கும் கம்பி.
cross-pollination
n. (தாவ.) அயல்மலர்ப் பூந்துகள் சேர்க்கை, ஒருமலரின் சூலகமுகட்டில் மற்றொரு மலரின் பூந்துகள் ஒட்டிப் பொலிவுண்டாதல்.
cross-purpose
n. மாறுபட்ட நோக்கம், நோக்கமுரண், முரண்பட்ட நடவடிக்கை, முரண்பாடான அமைவு.
cross-quarters
n. கல்லில் செதுக்கிய சிலுவை வடிவ மலர்ப் பொறிப்பு.
cross-question
v. குறுக்குக்கேள்வி கேள், நுணுக்க விவரங்குறித்த கிளைக்கேள்வி கேள், நுட்பதிட்ப முடிவு செய்வதற்குரிய துணை வினா எழுப்பு.
cross-ratio
n. (கண.) குறுக்கு விகிதம், சமநிலையமைதி அற்ற விழுக்காடு.
cross-reference
n. குறுக்குக் குறிப்பு, சுவடியில் மற்றொரு தலைப்பு அல்லது வாசகம் பற்றி எழுதப்படும் குறிப்பு.
cross-road
n. முக்கியபாட்டையின் குறுக்கே செல்லும் பாதை, பக்கப்பாதை, இரண்டு பெரிய பாட்டைகளை இணைக்கும் இடைநெறி, பாதைகள் குறுக்கிடுமிடம்.
cross-roads
n. pl. முக்கியமான தீர்மானம் செய்யவேண்டிய கட்டம், ஒருவர் வாழ்க்கையில் இடர்ப்பாடான திருப்ப மையம்.
cross-row
n. நெடுங்கணக்கு.
cross-ruff
n. சீட்டாட்ட வகையில் ஒருபக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவர்விட்டொருவர் துருப்புச் சொல்லும் சீட்டாட்டம் ஆடு.
cross-saddle
n. இருபுறமும் கால்விரித்துக் குதிரையேறிச் செல்வதற்கேற்ற சேணம்.