English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
crossed
a. குறுக்காக வைக்கப்பட்டுள்ள, சிலுவைக்குறி போட்டுள்ள, குறுக்கிட்டுக் கெடுக்கப்பட்ட.
crossfish
n. நட்சத்திர மீன், ஐந்து அல்லது ஐந்துக்கு மேற்பட்ட கை போன்ற உடலுறுப்புக்களையுடைய கடல்வாழ் உயிரினம்.
crossing
n. சிலுவைக்குறி போடுதல், குறுக்கே செல்லுதல், பாதைகள் குறுக்கிடுமிடம், திருக்கோயில் குறுக்கிடைகழி, தெருக்கடப்பதற்குரிய இடம், குறுக்கிட்டுப் பாழாக்குதல், இருவேறு இனங்களைக் கலக்கச்செய்தல்.
crossing-over
n. (உயி.) இனக்கீற்றுக்கள் இணைகூடி மீண்டும் பிரியும்போது அவற்றின் உறுப்புக்கள் ஒன்றற்கொன்று மாறிப்போதல்.
crossing-sweeper
n. கடவுபெருக்குபவர், தெரு கடக்கப்படும் இடத்தைப் பெருக்குபவர்.
crossleaved
a. எதிரெதிர் குறுக்காக அமைந்துள்ள நான்கு இலை வரிசைகளையுடைய.
crosstree
n. கப்பல் பாய்மரத்தின் மேல்முனைக்கருகே அமைக்கப்பட்டுள்ள மரம் அல்லது உலோகத்தாலான குறுக்குக்கை.
crosswise
adv. சிலுவை வடிவத்தில், குறுக்காக.
crosswort
n. ஒன்றற்கொன்று குறுக்கான இலையமைப்புக் கொண்ட செடி வகை.
crotch
n. மரக்கவடு, இருகிளை பிரியும் இடம், மனித உடலின் காற்கவடு.
crotchet
n. கொளுவி, கொக்கி, இசையின் கால அளவைக் கூறு, அரை மாத்திரை, நெறிபிறழ்ந்த அவா, திடீரென மாறும் மனப்பாங்கு, திடீரெனத் தோன்றும் எண்ணம், தனிப்போக்கு, தனிப்பட்ட தன்மை, தற்பெருமை.
crotcheteer
n. தனித்தன்மை கொண்டவர், விசித்திர எண்ணம் கொண்டவர், திடீரென மாறும் நிலையற்ற மனப்பாங்காளர்.
crotchety
a. விசித்திர எண்ணங்கள் நிறைந்த, திடீரென மாறும் மனப்பாங்குள்ள.
croton
n. அழகுக்காக வளர்க்கப்படும் தோட்டச் செடி இனம், தோட்டச் செடிவகை.
crouch
n. குனிதல், பதுங்குதல், கெஞ்சும் நிலை, (வி.) குனி, பதுங்கு, கெஞ்சு, கெஞ்சி ஆதரவை நாடு.
croup
-1 n. கொடிய இருமலோடு கூடிய குழந்தைகளின் காற்றுக்குழல் அழற்சி நோய் வகை, தொண்டையில் உண்டாகும் கரகரத்த ஒலி, (வி.) கரகரத்த ஒலியோடு பேசு, தவளை போலக் கத்து.
croupier
n. பொது விருந்தில் மேசையின் கீழ்ப்பகுதியில் உட்காரும் துணைத்தலைவர், சூதாட்ட மேசையில் பணம் திரட்டிக் கெலித்தவர்களுக்குக் பணம் கொடுத்துப் பணியாற்றுபவர்.
crouton
n. (பிர.) சூப்பியுடன் வழங்கப்படும் பொரித்த சிறு அப்பத்துண்டு.
crow
n. காக்கை, காக இனப்பறவை, மட்ட நிலக்கரி, சேவலின் கூவல், வெற்றிக் குரலொலி, குழந்தையின் மகிழ்வொலி, கடப்பாரை, பாரைக்கோல், (வி.) காகம் போல் கரை, கத்து, பெருமை அடித்துக்கொள், வீம்பு பேசு, வெற்றி வீறாப்புக்கொள், மகிழ்ச்சி எக்களிப்புக்கொள்.