English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
canthi, n. Canthus
என்பதன் பன்மை.
canthus
n. கடைக்கண், கண் இமைகள் கூடுமிடத்துள்ள கோணம்.
canticle
n. சிறுபாடல், பாசுரம், யாப்பு அமைதியில்லாத கிறித்தவத் திருக்கோயில் பாடல்.
Canticles
pl. சாலமன் பாடலேடு.
cantilever
n. பிடிமானம், சுவர்களிலிருந்து கைபோல் நீண்டு பாரத்தினைத் தாங்கும் கவை.
cantillatory
a. இசைக்குரலுடன் பாடுகிற.
cantle
n. வெட்டுத்துண்டு, சேணத்தின் பின்பகுதி, (வி.) துண்டு வெட்டு, பிரி, பகு.
cantlet
n. துண்டுப்பகுதி.
canto
n. காவியப் பெரும்பிரிவு, காண்டம், (இசை.) இன்னிசையை ஏந்திச் செல்லும் பகுதி.
canton
-1 n. நாட்டுப் பிரிவு, மண்டலம், சுவிட்சர்லாந்து நாட்டின் மாகாணம், பிரான்சு நாட்டின் ஆட்சிச் சிறு பிரிவு, நிலப்பிரிவு, மூலை, (க-க.) அரை உட்பதிவான சதுரத்தினால் அழகு செய்யப்பட்ட மூலை, (கட்.) கேடய மேல் மூலையில் சிறு சதுரம். (வி.) பகுதிகளாகப் பிரி, தனி ஆட்சிப் பகுகளாக வகு.
cantonal
a. தனிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட, தனி ஆட்சிப் பகுதிகளைச் சார்ந்த.
cantoned
a. (க-க.) அரை உட்பதிவான சதுரத் தூண்களினால் அழகு செய்யப்பட்ட மூலைகளையுடைய, (கட்.) மூலைக் சின்னங்களுக்கிடையே வைக்கப்பட்டுள்ள.
cantonment
n. பாளையம், படைவீரர்களின் தற்காலக் குடியிருப்பு, படையினர் நகரம்.
cantor
n. கிறித்தவத் திருக்கோயில் இசை இயக்குநர்.
cantorial
a. கிறித்தவத் திருக்கோயில் இசை இயக்குநருக்கு உரிய, பாடகர் குழுவுக்குரிய பகுதியின் வடதிசை சார்ந்த.
cantoris
a. திருக்கோயில் பாடகர் குழுப்பகுதியின் வடதிசைக்குரிய, (இசை.) இயக்குநர் புறமிருந்து பாடுவதற்குரிய.
cantridge
n. வெடிக்கலம், வெடியுறை, தோட்டா, குண்டுகள் செறிந்துள்ள பொதியுறை, பீரங்கிக்குரிய வெடிமருந்து உறை.
cantrip
n. மாயக்காரியின் சூழ்ச்சி வித்தை, சிறு குறும்பு, குறும்புச்செயல்.