English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cutlery
n. வெட்டுக் கருவிகளின் தொகுதி, இருப்புக்கருவித் தொழில், இருப்புக் கருவி வாணிகம்.
cutlet
n. ஆட்டு விலா இறைச்சிக் கறி, கன்றுக்குட்டி விலா இறைச்சிக்கறி, விலா இறைச்சிக்கறி போன்ற பிற கறி.
cutpurse
n. திருடன், முடிச்சுமாறி, அரைக்கச்சையிலுள்ள பணப்பையைக் கத்தரித்துக் களவாடுபவன்.
cutter
n. வெட்டுபவர், வெட்டுவது, வெட்டுக்கருவி, துணிஅளந்து வெட்டும் தையற்காரர், போர்க்கப்பலைச் சேர்ந்த படகு, ஒற்றைப் பாய்மரக் கப்பல் வகை, ஆழ நீள்கலம், வெட்டப்படகூடிய உயர்செங்கல் வகை, முன்வாய் வெட்டுப்பல்.
cutthroat
n. கொலைக்காரன், போக்கிரி, முரடன், கொடியவன், சீட்டாட்டத்தில் மூன்றுபேர் தத்தமக்கெனத் தனிப்பட ஆடும் சீட்டாட்ட வகை. திறந்த அம்பட்டக்கத்தி, (பெ.) கொலைகாரத்தனமான, பாழ்படுத்துகிற.
cutting
பிரித்தல், வெட்டுதல், கூர்ங்கருவியால் செதுக்குதல், செதுக்கிய துண்டு, வெட்டுவாய், பிளவு, பத்திரிகைத் துண்டு, பதியம், வேறொரிடத்தில் பதியம் வைத்து வளர்ப்பதற்காக வெட்டப்பட்ட செடியின் கிளை, சாலை அல்லது இருப்புப் பாதைக்காக வெட்டப்பட்ட அகழ்வு.
cuttle
n. கணவாய் மீன், துரத்தப்பட்டால் கறுப்பு நீர்மத்தை வெளிப்படுத்தும சிப்பிமீன் வகை.
cuttle-bone
n. பற்பொடி செய்வதற்கும் உலோகங்களுக்கு மெருகிடுவதற்கும் பயன்படும் கணவாய் மீனின் உள்தோடு.
cutty
n. புகைபிடிக்கும் சிறு களிமண் குழல், தடித்த குள்ளமான சிறுமி, குறும்புக்காரி, துடுக்கான பெண்.
cutty-stool
n. ஸ்காத்லாந்து திருக்கோயில்களில் ஒழுக்கங் கெட்ட பெண்கள் ஊரார் கண்டனத்துக்காக அமர்த்துவிக்கப்படும் இருக்கை.
cutwater
n. தண்ணீரைக் கிழித்துச் செல்லும் கப்பலின் முன்புற முகப்பு, பாலத்தின் அலைதாங்கி முன்வளிம்பு.
cutworm
n. நிலத்தள அருகிலேயே செடிகளின் தண்டுகளை அறுக்கும் அந்துப்பூச்சி இனத்தின் முட்டைப்புழு வகை.
cy pres
n. (சட்.) ஒன்று செயற்பட முடியாதபோது ஏற்கப்படவேண்டிய அதற்கு மிக அணித்தான நிலை, (பெ.) மிக அணித்தான நிலையுடைய, (வினையடை) மிக அணித்தான நிலையில்.
cyanic
a. நீல நிறமான, (வேதி.) கரிய வெடியச் சேர்ம வகைக்குரிய.
cyanide
n. (வேதி.) கரிய வெடியச் சேர்ம வகையுடன் உலோகம் சேர்ந்த நேர்சேர்மம், (வி.) கரிய வெடியச் சேர்ம உலோகம் சேர்ந்த நேர் சேர்மத்தால் செயற்படுத்து.
cyanogen
n. (வேதி.) கரியமும் வெடியமும் கொண்ட சேர்மான வகை.
cyanometer
n. வானத்தின் அல்லது கடலின் நீல நிறத்தை அளந்து மதிப்பிடுவதற்கான கருவி.
cyanosis
n. (மரு.) உயிரகம் சரிவர ஊட்டப்பெறாத குருதி சுழல்வதனால் தோல் நீல நிறமாகக் காணப்படும் நோய்வகை.
cyanotype
n. நீல அச்சுப்படிவம், நீலத்தில் வெண் கோடாக உருவப் படிவுறும் நிழற்படமுறை அச்சு.
cycad
n. (தாவ.) பனை போன்ற செடிவகை.