English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cyclamen
n. (தாவ.) தொடக்கத்திலேயே தோன்றும் மலர்களுக்காகவென்று பயிரிடப்படும் செடிவகை.
cycle
n. ஊழி, காலவட்டம், திரும்பத் திரும்ப வரவல்ல பெருங்காலப் பிரிவு, முழுநிலை மாறுதல் தொகுதி, மண்டலம், முழுநிலைத் தொடர் வரிசை, சுழற்சியாக வரும் நிகழ்ச்சி, வானெறிச் சுற்றுவட்டம், பாடல் தொகை, ஒரு பொருள் பற்றிய பாடல் தொகுதி, இருசக்கர மிதிவண்டி, முச்சக்கர மிதிவண்டி, (வி.) வட்டமாகச் சுழல், மிதிவண்டி ஏறிச்செல்.
Cycle company
மிதிவண்டிக் குழுமம், மிதிவண்டி வாடகைக் கடை
Cycle rickshaw-manufacturers
மிதியிழுவை உருவாக்கம், நரவண்டி உருவாக்கம், மிதியிழுவை உற்பத்தியாளர்
cycle-car
n. எளிய அமைப்புடைய சிறு உந்துவண்டி.
Cycle-mart
மிதிவண்டி அங்காடி, மிதிவண்டி விற்பனை நிலையம்
cyclic, cyclical
மீண்டும் மீண்டும் சுழன்று வருகிற, மண்டலிக்கிற, காலவரன்முறை வட்டத்துக்குரிய, செய்யுள் தொகைநிலைத் தொடருக்குரிய, (தாவ.) மலர்கள் வகையில் வரிசைச் சுற்றுகளான அமைவுள்ள உறுப்புகளையுடைய, வளைய அமைப்புடைய, (வேதி.) வளையத்தொகுதிகளாக அமைந்துள்ள.
cyclist
n. மிதிவண்டி ஏறிச்செல்பவர்.
cyclograph
n. வட்டம்-வளைவுகள் வரைவதற்கான கருவி.
cycloid
n. வட்டப்புள்ளி நெறி வளைவு, வட்டத்தின் மீதோ எல்லையிலோ உள்ளோ உள்ள புள்ளிவட்டம் நேர்வரைமீது உருளும்போது செல்லும் நெறிவட்டம், (பெ.) வட்டப்புள்ளி நெறிவளைவின் வடிவான, (வில.) ஒரு சீரான விளிம்புடைய செதிள்களைக் கொண்ட.
cycloidian
n. (வில.) ஒரு சீராக மடிந்த விளிம்புள்ள செதிள்களையுடைய மீன்வகை.
cyclometer
n. வட்டைகளை அளப்பதற்கான கருவி, மிதிவண்டி ஓடிய தொலைவைப் பதிவு செய்வதற்காக அதன் சக்கரத்துடன் இணைக்கப்பட்டுள்ள அமைவு.
cyclone
n. சுழல்காற்று, சூறை, புயல், குறையளவு காற்றழுத்தமிக்க இடத்தைச் சுற்றியெழும் சிறுதிறப் பரப்பின் வன்றிறற் சூறாவளி, சுழற்சியால் பொருள் பிரித்தெடுக்கும் அமைவு, சக்கரச்சுளகு.
cyclopaedia
n. பல்பொருட்களஞ்சியம்.
Cyclopean
a. கிரேக்க புராணக் கதைக்குரிய ஒற்றை நெற்றிக்கண் அரக்கனுக்குரிய, ஒற்றை நெற்றிக்கண் அரக்கன் போன்ற, மிகப்பெரிய உருவுடைய, (க-க.) செப்பமுறாப் பெருங்கற்களைக் கொண்டு வரலாற்றுக்கு முற்பட்ட மிகப் பழங்காலத்தில் கட்டப்பட்ட கட்டிடப் பாணிக்குரிய.
cyclopropane
n. (வேதி.) பொதுநிலை நோவுத்தடை மயக்க மருந்தாகப் பயன்படும் நீர்க்கரிம வகை.
Cyclops
n. ஒற்றை நெற்றிக்கண்ணுடைய அரக்கன், ஒற்றைக் கண்ணுடையவர், (வில.) முன்புறம் ஒரு கண்ணுடைய நுண்ணிய நன்னீர் நத்தையினம்.
cyclorama
n. சுற்றுவட்ட அடுக்கணிக்காட்சி, சுற்றணிக் காட்சித்தொகுதி, நாடக அரங்கில் திரைப்படத்திலுமுள்ள வளைவான காட்சித் திரைப்பின்னணி.
cyclostyle
n. கையெழுத்துக்குப் படிகள் எடுப்பதற்கான அமைவு, (வி.) கையெழுத்துப் படியெடுக்கும் அமைவினால் படிகள் எடு.
cyclotron
n. (இய.) அணுப்பிளப்பிலும் செயற்கைக் கதிரியக்க ஆக்கத்திலும் பயன்படுத்தப்படும் மின்காந்த விரைவூக்கக் கருவி.