English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
carelessness
n. உன்னிப்பாயிராமை, கவனமின்மை.
caress
n. தைவரல், வருடுதல், அன்பாகத்தடவிக் கொடுத்தல், முத்தம் கொடுத்தல், புகழ்தல், (வி.) அன்பாகத்தடவிக் கொடு, வருடு, கொஞ்சு, சீராட்டு, புகழைச்சொல், பாராட்டு.
caressing
n. சீராட்டுதல், (பெ.) அன்பாய்த் தட்டிக்கொடுக்கிற.
caret
n. இடையெச்சக்குறி, விடுபட்டுப் போனதைச் சேர்க்குமாறு சுட்டிக்காட்டும் குறி.
caretaker
n. காவற்பணிப் பொறுப்பாளர், கம்டிட மேற்பார்வைப் பொறுப்பாளர், (பெ.) இடையீட்டுக்காலக் கணடகாணிப்பு மேற்கொண்ட.
Carex
n. கோரைப்புல் வகையின் இனம்.
carfax, carfox
சதுக்கம், நாற்சந்தி.
cargo
n. கப்பல் சரக்கு, கப்பற்பாரம்.
cargoose
n. குறுஞ்சிறகுள்ள சூட்டுடை நீர்ப்பறவை,
Carib
n. மேற்கிந்தியத் தீவுகளின் தென்பகுதியிலுள்ள பழங்குடியினர், மேற்கிந்தியத் தீவுகளின் பழங்குடி மக்கள் பேசிய மொழி, (பெ.) மேற்கிந்தியத் தீவுகளின் பழங்குடி மக்களுக்குரிய.
caribou
n. வட அமெரிக்கக் கலைமான் வகை.
Carica
n. பப்பாளி மர இனம்.
caricature
n. பகடிப்படம், கேலிச்சித்திரம், ஒருவரது தனி இயல்புகளை மிகைப்படுத்திக்காட்டும் உரை, நையாண்டி வருணனை, (வி.) மிகைப்படுத்திக் கேலிக்குள்ளாக்கு, நகைப்புக்கிடமாகிப் படம் வரை, கேலிக்கூத்தாக்கிப் பழி.
caricaturist
n. பகடிப்படம் வரைபவர், நையாண்டி மிகையுரை எழுதுபவர், திரிந்து மிகைப்படுத்திக் கேலி செய்பவர்.
caries
n. (ல.) பல் சொத்தையாதல், எலும்பு உள்ளழிவு.
carillon
n. (பிர.) இசைபடு மணி ஒலித்தொகுதி, மணி ஒலி எழுப்பும் இசைப்பொறி அமைவு, மணிகளின் மூலம்மிழற்றப்படும் இன்னிசை.
carina
n. தோணி அகட்டு வரை, (தாவ.) பயற்றினத்தில் அடியிதழ்கள் இரண்டிணைந்துண்டான தோணி வடிவான மலர் வடிவம்.
carinal
a. தோணி வடிவத்துக்குரிய, தோணி வடிவம் உடைய.
carinate
a. தோணியகடு போன்ற அமைவுடைய.
carioca
n. தென் அமெரிக்காவில் பிரசீல் நாட்டு ஆடல்வகை, ஆடல் இசை வகை.