English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cariole
n. மூடக்கில்லாத சிறு வண்டி, பளுவற்ற வண்டி.
carious
a. பல் அல்லது எலும்பு வகையில் சொத்தை விழுந்த, இற்றுப்போன.
cark
v. துன்பத்தில் அழுத்து, தொல்லைப்படுத்து, கவலைப்படு.
carking
a. கவலைகளால் அழுத்தப்பட்ட, தொல்லைப்பட்ட வருத்துகிற.
carl
n. ஆள், உழவன், கோமாளி, கீழ்மகன்.
carl-hemp
n. பெண் சணல் செடி.
carley float
n. விமானியின் அவசரகால மிதவை.
carline
n. முட்செடியினம்.
Carlism
n. (வர.) ஸ்பானிய அரசுரிமைப் பூசலில் நான்காம் சார்லஸின் இரண்டாவது மகனாகிய டான் கார்லசு பக்கமான கட்சி ஆதரவு.
Carlist
n. ஸ்பானிய அரசுமைப் பூசலில் நான்காம் சார்லசின் இரண்டாவது மகனாகிய டான் கார்லசை ஆதரித்தவர்.
carlock
n. ருசிய நாட்டில் செய்யப்படும் மீன் வச்சிரம்.
Carlovingian
n. (வர.) சார்லிமேன் என்ற சார்லஸ் பேரரசரை முதல்வராகக் கொண்ட இரண்டாவது பிரஞ்சு அரச மரபினர், (பெ.) இரண்மாவது பிரஞ்சு அரசமரபுக்குரிய.
Carlowitz
n. டான்யூப் ஆற்றின் கரையிலுள்ள கார்லோவிட்ஸ் நகரத்தில் வடிக்கப்படும் சிவப்பு இன்தேறல்.
Carlylean
a. தாமஸ் கார்லைல் (1ஹ்ஹீ5-1க்ஷ்க்ஷ்1) இலக்கிய நடையை ஒட்டிய.
Carlylese
n. தாமஸ் கார்லைலின் ஆற்றல் மிக்க இலக்கியப்பாணி.
Carlylesque
a. ஆங்கில எழுத்தறிஞர் தாமஸ் கார்லைலின் இயல்புக்குரிய.
Carlylism
n. தாமஸ் கார்லைலின் கோட்பாடு, கார்லைலின் பாங்கு.
Carmagnole
n. (பிர.) (வர.) பிரஞ்சுப் புரட்சிக்காரர்களின் (1ஹ்ஹீ3) ஆடலோடு கூடிய பாடல், பிரஞ்சுப் புரட்சிக்காரர்கள் அணிந்த சட்டை வகை.
carman
n. விசைக்கல வலவர், மோட்டார் ஓட்டுபவர், வண்டியோட்டி.
Carmelite
n. பாலஸ்தீனத்தில் 1156-இல் கார்மெல் மலையருகே தொடங்கப்பெற்ற சபையைப் பின்பற்றி இரண்துண்டு வாழும் கட்டுப்பாடு மேற்கொண்ட துறவி, இரண்துண்டு வாழும் நியதியுடைய துறவி நங்கை, பேரிக்காய்இனப் பழவகை, நேர்த்தியான கம்பளித்துணி வகை, (பெ.) இரண்துண்டு வாழும் சபைத் துறவிகளின் அமைப்புச் சார்ந்த.