English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
carrageen, carragheen
n. வட ஐரோப்பாவில் வழங்கும் உணவுக்குப் பயன்படும் கடல்பூண்டு வகை.
carriage
n. வண்டி, போக்குவரவு, இருப்பூர்தியின் பிரயாணி வண்டி, பீரங்கியின் சகடம், இறங்கும் விமானத்தைத் தாங்கிக் கொள்ளும் கட்டமைப்பு, வண்டியின் மேற்பாகமில்லாத சகடச்சட்டம், இயந்திரத்தைத் தாங்கி இயக்கும் பாகம், கொண்டு போதல், எடுத்துச் செல்லுதல், ஏற்றிச் செல்லுதற்குப் பிடிக்கும் செலவு, செயலாண்மை, செயலாட்சி, நிறைவேற்றம், நடக்கை, கோலம், நடையுடை தோற்றம்.
carriage-clock
n. தலைமாறி வைத்தாலும் ஒழுங்காய் இயங்கும் கடிகாரம்.
carriage-company
n. தங்களுக்கென வண்டிகள் அமர்த்திக்கொள்ளவல்ல செல்வர்.
carriage-dog
n. புள்ளிகளையுடைய நாய்வகை.
carriage-drive
n. பூங்கா முதலியவற்றினுடே வண்டிகள் செல்வதற்கான சாலை.
carriage-forward
adv. வண்டிக்கட்டணம் முன்னதாகச் செலுத்தாமல்.
carriage-free
adv. கொண்டு செல்வாற்கான கட்டணமின்றி.
carriage-paid
adv. வண்டிக் கட்டணம் முன்னதாகச் செலுத்தப்பட்டு.
carriage-way
n. வண்டிப்பாதை, வண்டிகளின் போக்குவரத்துக்காகவென்று ஒதுக்கப்பட்ட சாலையின் பாகம்.
carriageable
a. வண்டிகள் செல்லத்தக்க.
carrick-bend
n. (கப்.) இருமடிக்கொளுவி முடிச்சு, இரண்டு கயிறுகளை இணைப்பதற்கான முடிச்சு வகை.
carrier
n. கொண்டு செல்பவர், சுமை கூலிக்காரர், தூதர், சிப்பங்கள் முதலியவற்றை வாடகு எடுத்துச்செல்ல ஒப்புக்கொள்பவர், கொண்டு செல்லும் ஏதேனுமொன்று, தூக்கு கலம், பொதி ஊர்தி, மிதிவண்டியில் பொருள்களை வைத்துக்கொண்டு செல்வதற்கான பகுதி, நோய்கடத்தி, தான் நோய்க்குட்படாமல் நோய் நுண்மம் பரப்பும் உயிரினம், கம்பியில்லாக் செய்தியில் மின்னலை ஊடகம், செய்தி கொண்டு செல்லும் புறா.
carrier-pigeon
n. முன்னாட்களில் செய்திகள் கொண்டு செல்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட புறா, புறாவகை.
carriole
n. ஒரு மனிதன் செல்லத்தக்க சிறு வண்டி வகை, விரைமூடு வண்டி, கானடா நாட்டுக்குரிய சறுக்கு வண்டி.
carrion
n. அழுகும் பிணம், ஊழ்த்த இறைச்சி, இழிபொருள், குப்பைக்கூளம், அழுக்கு, (பெ.) அழுகிய, அருவருப்பான, ஊழ்த்த இறைச்சிக்குரிய, அழுகும் பிணம் தின்கிற.
carrion-crow
n. பிணம் தின்னும் காக்கை வகை.
carrion-flower
n. அழுகிய இறைச்சியின் நாற்றமுள்ள மலர்செடிவகை.
carriwichet
n. தெறுமொழி, காரசாரமான சூட்டுரை நகைத்துணுக்கு, சொற்புரட்டு, சிலேடைப் பேச்சு.
carron-oil
n. ஆளிவிதையும் சுண்ணநீரும் கலந்த தீப்புண்ணாற்றும் தைலம்.