English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
carter
n. வண்டி ஓட்டுபவர்.
Cartesian
n. பிரஞ்சு மெய்ந்நுலாசிரியராகிய ரேனே டேகார்ட் (15ஹீ6-1650) என்பவரது மெய் விளக்கத்துறையைப் பின்பற்றுபவர், (பெ.) பிரஞ்சு மெய்ந் நுலாசிரியராகிய டேகார்ட் என்பவரது மெய்விளக்கத் துறைக்குரிய, டேகார்ட்டின் உடனிணைவு முறைமைக்குரிய.
carthamine
n. குங்குமப் பூவிலிருந்து செய்யப்படும் சாயப்பொருள்.
Carthusian
தூயதிரு. புரூனோ (10க்ஷ்6) என்பவரால் நிறுவப்பட்ட துறவிகளின் அமைப்பைச் சார்ந்தவர், கார்த்தூசியத் துறவி மடத்தின் மனையிடத்தில் அமைந்த 'சார்ட்டர் அவுஸ்' என்னும் கல்வி நிலைய மாணவர், (பெ.) தூயதிரு. புரூனோ என்பவரால் காணப்பட்ட துறவிகளின் அமைப்புக்குரிய, கார்த்தூசியத் துறவி மடத்தின் மனையிடத்தில் அமைவுற்ற 'சார்ட்டர் அவுஸ்' கல்வி நிலையத்துக்குரிய.
cartilage
n. குருத்தெலும்பு.
cartilaginoid
a. குருத்தெலும்பு போன்ற.
cartilaginous
a. குருத்தெலும்புக்குரிய, குருத்தெலும்பாலான, முள்முனைப்பான, குருத்தெலும்பு போன்று கெட்டிப்புடைய, (உயி.) எலும்புச்சட்ட முழுதும் குருத்தெலும்பாலான.
cartographic, cartographical
a. நிலப்படத்துக்குரிய, தேசப்படம் வரைதல் பற்றிய.
cartography
n. நிலப்படத்துறை, தேசப்படம் வரைதல்.
cartology
n. நாட்டுப் படங்கள் மனை விளக்கப்படங்கள் ஆகியவற்றின் ஆய்வுத்துறை.
cartomancy
n. ஆட்டச் சீட்டுக்களை வைத்துக் குறி சொல்லும் முறை.
carton
n. எய்குறியின் நடுவில் உள்ள வெள்ளைச்சில்லு, மையச் சில்லின்மேல் படும் வேட்டு, பொருள்கள் வைப்பதற்கான அட்டைப்பெட்டி, பெட்டிகள் செய்வதற்குப் பயன்படும் அட்டை.
carton-pierre
n. கல்தோற்றம் அளிக்கும் அட்டைப் பலகை வகை.
cartonnage
n. தாள் அட்டை, அட்டைப் பலகை, பதனப்பிணத்தின் மேற்கவிகை.
cartoon
n. வண்ணப்படம் எழுதுவதற்கு மாதிரியாகத் தடித்த தாளில் எழுதப்படும் வரைப்படம், தொடர்ப்பட வரிசையிலிருந்து எடுக்கப்படும் திரைக்காட்சி, அரசியல் வசைக்கேலிச் சித்திரம், (வி.) வசைக்கேலிப்படம் வரை, கேலிப்படம் வரைந்து ஏளனத்துக்குள்ளாக்கு.
cartoonist
n. ஏளன ஓவியம் வரைபவர், வேடிக்கை ஓவியர்.
cartophily
n. புகைப் பூஞ்சுருள் அட்டைத்திரட்டு, 'சிகரட்' அட்டைச் சேமிப்பு.
cartouch, cartouche
துப்பாக்கிக்குண்டு-தோட்டா முதலியவைகளுக்கான பெட்டி, வெடி மருந்துப்பெட்டி, (க.க.) சுருள்தாள் போன்ற ஒப்பனை வேலைப்பாடு. (தொல்.) அரசர் பெயர்களையும் தெய்வப் பெயர்களையும் கொண்டுள்ள பழைய எகிப்திய நீள்வட்ட வளையம்.
cartridge-belt
n. வெடியுறைகள் செருகி வைப்பதற்குரிய கச்சைவார்.
cartridge-paper
n. கெட்டித்தாள், வரைபடம் எழுதுதற்கும் திண்ணிய உறைகள் செய்வதற்கும் பயன்படும் முரட்டுக்காகிதம்.