English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cascade
n. அருவி, அருவித்தொகுதி, நீர்வீழ்ச்சி, அலையாக விழும் பூ வேலைப்பின்னல் முடி, கருவிகலத் தொகுதியின் இடையிணைப்பு, (வி.) அருவியாக விழு, அலையலையாக விழு.
cascara, cascara sagrada
n. (ஸ்பா.) குடலிளக்கும் நன் மருந்தாகப் பயன்படும் வட அமெரிக்காவின் கலிபோர்னிய நாட்டு மரப்பட்டை வகை.
casco
n. சரக்குகளைக் கொண்டு சென்று கப்பலில் ஏற்றி இறக்கும் பிலிப்பைன் தீவுகளுக்குரிய படகு வகை.
case
-1 n. பை, கூடு, உறை, பெட்டி, தொகுதி, சுவர் முகப்புப் பொதிவு, புத்தக மேலட்டை, புத்தக மூட்டுப்பகுதி, அச்சகப் பொறுக்குத் தட்டு, சிதறு வெடியுறைக்குண்டு, (வி.) பையில் போடு, உறையில் வை, பொதி, போர்த்து, தோலிட்டு மூடு.
case-book
n. மருத்துவரின் தொழில்முறைக் குறிப்பேடு.
case-bottle
n. பெட்டியில் குப்பியுடன் குப்பி பொருந்த வைப்பதற்கு வாய்ப்பான சதுரவடிவக் குப்பியுறை.
case-harden
v. பரப்பில் கரியகமூட்டுவதன் மூலம் இரும்பைப் கடும்பதப்படுத்து, மரத்துப்போகச் செய், உணர்ச்சியற்ற நிலை உண்டுபண்ணு.
case-hardening
n. பரப்பில் கரியகமூட்டுவதன் மூலம் இரும்பைப் கடும்பதப்படுத்துதல், இரும்பில் கடும்பதம், உணர்ச்சியின்மை.
case-knife
a. எப்போதும் உறையிலேயே வைக்கப்படும் பெரியகத்தி வகை, பட்டாக் கத்தி.
case-law
n. தீர்ப்புவழிச்சட்டம், முன்வழக்குத் தீர்ப்புகளைப் பின்பற்றிவந்த மரபுச்சட்டம்.
case-maker
n. புத்தக மேலட்டை செய்பவர்.
case-man
n. அச்சுக்கோப்பவர்.
case-shot
n. சிதறு குண்டாகப் பயன்படுத்தப்படும் இரவைக் குண்டுகளடங்கிய தகர அடைப்பு.
case-work
n. சமூகப்பணியிடையே தனிமனிதனைப்பற்றிய கவனிப்புக் கூறு.
case-worm
n. ஈ வகையின் நீரில் மிதக்கவிடப்படும் முட்டைப்புழு.
caseation
n. உறைபாற் கட்டியாக மாறுதல்.
casehistory
n. முன் மரபு, மருத்துவத்துக்கான தனி வரலாறு-மரபு-சூழல்கள் பற்றிய விளக்கத்தாள்.
casein
n. பால்புரதம், உறைபாற்கட்டியின் அடிப்படைக் கூறு.
casemate
n. அகழி கைப்பற்றியவர்கள் மீது துப்பாக்கி நுழைத்துச் சுடுவதற்கான பக்கத்தொளைகளையுடைய அரண் மதிலகக் கவிகைமாடம், காப்பாண் மாடம், போர்க்கப்பல்களில் பீரங்கிகளுக்கான கவசமாடம்.
casemated
a. காப்பரண் மாடத்தையுடைய, கவசமாடம் வாய்ந்த, காப்பரண் பாதுகாப்புடைய, கவசமாடக் காப்பிணைக் கொண்ட, காப்பரண் மாடம் போன்ற கட்டுமானமுடைய, கவசமாடம் போன்ற.