English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cashierment
n. பணி நீக்கம்.
cashmere, cashmere shawl
n. காசுமீரச் சால்வை, மென்மைமிக்க காசுமீர வெள்ளாட்டு மயிராலான கம்பளிப் போர்வை, காசுமீரச் சால்வைப் போலி.
casing
n. பெட்டியிலடைத்தல், உறையில் செறித்தல், பொதித்தல், பொதியுறை, மேலுறை, கவிகை, புறத்தோடு.
casino
n. பொது ஆடரங்கம், நடனக்கூடம்-ஆட்ட மேசைகள் முதலிய வாய்ப்புகளையுடைய பொதுமாளிகை, சீட்டாட்ட வகை.
cask
n. மிடா, மரப்பட்டிகைகள் இணைத்து இரும்புப்பட்டைகளால் இறுக்கப்பட்ட தேறல் பேழை, மிடா அளவு குடிவகை, குடிவகை அளவு, (வி.) மிடாவில் அடை.
casket
n. பேழை, சிறு மிடா, பெட்டகம், அணிமணிப்பெட்டி.
Caslon, Caslon type
n. வில்லியம் காஸ்லான் (மறைவு 1ஹ்ஹ்6) என்பவர் உருவாக்கிய அச்சுருப்படிவம், காஸ்லானின் முறை பின்பற்றிய அச்சுருப்படிவம்.
cassandra
n. கிரேக்க கதைக்காப்பியங்களில் அப்போலோ என்ற தேவனால் வருவது கூறும் திறமும் அதை எவரும் நம்பாத குறையும் ஒருங்கே அளிக்கப்பெற்றவளான திராய் அரசன் பிரெயிம் என்பவரின் புதல்வி, எவராலும் மதிக்கப் பெறாநிலை பெற்ற கணியர்.
cassareep, cassaripe
ஆற்றல்சான்ற நச்சரியாகவும் சுவைப்பொருளாகவும் பயன்படும் கசப்பான கூவைக் கிழங்கு வகையின் சாறு.
cassation
n. துடைத்தழிப்பு, ஒழிப்பு, நீக்கம், முறைமன்றத் தீர்ப்பு நீக்கம்.
cassava
n. கூவைக்கிழங்குவகை, மரவள்ளிக் கிழங்கினத்தின் வகை, கூவைக்கிழங்கு வகையின் மாவு, கிழங்குவகையின் மாச்சத்து, கூவைக்கிழங்கு வகையின் மாவால் செய்யப்பட்ட அப்பம்.
casserole
n. புழுக்குத்தட்டம், கறியுணவு வகைகளின் வேவுகலமாகவும் பரிமாறுகலமாகவும் ஒருங்கே பயன்படும் சூடு கையேறாத மண்கலத் தட்டம்.
Cassette
பேழில், பேழை, நாடா
cassia
n. தாழ்ந்ததரக் கருவாய்ப்பட்டைவகை, கருவாமரவகை.
cassimere
n. மணியிழை நேரியல் கம்பளி ஆடைவகை.
cassino
n. சீட்டாட்ட வகை.
cassock
n. ஆங்கிலத் திருச்சபைக்குரிய குருமார் அணிந்துவந்த நீண்ட இறுக்கமான உள்ளங்கி வகை, ஸ்காத்லாந்து நாட்டுக் குருமார் அணியும் கரும்பட்டு உள்ளாடை.
cassolette
n. நறும் புகைக்கலம், தூபக்கலம், முகடுதுளையரிப்பிட்ட மணப்பொருட்பேழை, நறுமணப் பெட்டி.
cassonade
n. துப்புரவு ஆக்கப்படாத சர்க்கரை.