English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
casting
n. எறிதல், இடுதல், போடுதல், வார்ப்படம், வார்ப்பு, வார்ப்புக்குரிய பொருள், வார்ப்புரு.
casting-net
n. எறிவலை, வாய்ப்பக்கம் கீழ்நோக்க எறிந்து மையமூடாக நாற்புறக்கோடியும் இழுக்கப்படத்தக்க வகையில் அமைவுற்ற பெரிய வட்ட வடிவான வலை.
casting-vote
n. தீர்வுமொழிச்சீட்டு, முடிவுவாக்கு, சரிசம வாக்குகளைப் பெற்ற கட்சியினரிடையே வெற்றி தேர்வு தரத்தக்க மேலுரிமையுடைய மொழிச்சீட்டு.
casting-weight
n. சாய் எடை, சர்சமநிலையை ஏதேனும் உருபுறமாக்கவல்ல மிகை எடை.
castle
n. காப்பரண் மாளிகை, காப்பரண், காவற்கோட்டை, அரண் மாளிகையாக முன்பு இருந்த கட்டிடம், பெருமக்கள் மாளிகை, தற்கால மேலைச் சதுரங்க ஆட்டத்தில் நால்வகைக் காயுருக்களில் ஒன்று(அம்பாரி), யானைமீதுள்ள காப்புக்கூண்டு, அம்பாரி, பெருங்கப்பல், படைநாவாய், (வி.) சதுரங்க ஆட்டத்தில் அம்பாரிக்காயுருவை நோக்கி அரசுக்காயுரு இருகட்டம் சென்று அது தாண்டிய கடைசிக் கட்டத்துக்கு அம்பாரிக்காயுருவைக் கொண்டுவருமாறு ஆடு.
castle-builder
n. மனக்கோட்டைக் கட்டுபவர், பகற்கனவாளர், கற்பனைத் திட்டங்களிடுபவர்.
castle-building
n. மனக்கோட்டைக் கட்டுதல், பகற்கனவு காண்டல்.
castle-guard
n. காப்பரண் மாளிகைக் காவலர், மனக்கோட்டைக் காவலர்.
castle-nut
n. பொட்டுமரை, இயந்திரத்தில் மற்றோர் உறுப்பின் முனைப்பூசி வந்து பொருந்துவதால் சுழற்சி நிறுத்தப்படும்படியாகச் சுற்றுபுறத்தில் துளையுடைய முகிழ்.
castled
a. காப்பரண் மாளிகைகளையுடைய, காவற்கோட்டைகளைக் கொண்ட.
castor
-1 n. உழன்றி, உழலை, இருக்கைகளின் கால்களில் பொருந்திய திருகுசுழல் சக்கரம், தௌிபுட்டில், திவலைகள் கொட்டும் முகடு உடைய கலம், உணவு மேடையில் துணைச்சுவைப் பொருள்களுக்குரிய கலம்.
castor-oil
n. ஆமணக்கு வகையின் எண்ணெய், குடவிளக்க மருந்தாகவும் மசகெண்ணெய்யாகவும் வழங்கும் தாவர எண்ணெய் வகை.
castoreum
n. நீர்நாய் வகையின் பிட்ட அடிச்சுரப்பி, நீர்நாய் வகையின் பிட்ட அடிச்சுரப்பியிலிருந்து உண்டுப்பண்ணப்படும் கூர்மணப்பொருள்.
castors
n. pl. உணவு மேடையில் துணைச்சுவைப் பொருள்கள் வைப்பதற்குரிய நிலைச்சட்டம்.
castory
n. செந்நிறம், நீலச்சாயலார்ந்த செந்நிறம்.
castral
a. கூடாரத்துக்குரிய.
castrametation
n. கூடார அமைப்புக்கலை.
castrate
v. விதையடி, ஆண்மைப் போக்கு, இனப்பெருக்க ஆற்றல் அழி, மெலிவி, குறைபடுத்து, அகற்றிக்குறை உண்டுபண்ணு, வெட்டிக்குறை, கத்தரித்துக்குறை, தீமையகற்று, தூய்மைப்படுத்து.
castrated
a. விதையடிக்கப்பட்ட, தீமை அகற்றப்பட்ட, தூய்மையாக்கப்பட்ட, இடைவெட்டிக் குறைக்கப்பட்ட.
castration
n. விதையடிப்பு, இனப்பெருக்க ஆற்றலழிப்பு, (உயி.) விதை நீக்க அறுவை, (தாவ.) கருவக நீக்கம், மலரின் பூவிழை நீக்கம்.