English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cassowary
n. நியூகினியிலுள்ள தீக்கோழி இனத்தின் வகை.
cassumunar
n. கிழக்கிந்தியத் தீவுகளின் இஞ்சி வகை.
cast
-1 n. எறிதல், வீச்சு, தூண்டில் எறிவு, எறிபடை வீச்சு, ஆழம் பார்க்கும் குண்டிழை எறிவு, தூண்டில் முனைப்பகுதி, தூண்டிவிடத் தக்க இடம், எறிதொலை, வார்ப்புரு, வார்ப்புருவின் வார்ப்பட அச்சு, உருவம், வடிவம், பொறிப்பு, வண்ணம், நிறத்தின் சாயல், பண்பு, குற்ற அளவு, நாடக உறுப்பினர் நடிப்புப் பாகுபாடு, நடிப்புப் பாகுபாட்டுத் திட்டம். நடிகர் நாடகப் பகுதி, நாடக உறுப்பினர் குழு, நாடகக்காட்சி, மாதிரிக்காட்சி, காட்சித் திருப்பம், வாழ்க்கைப்போக்கின் திருப்பம், காலத்திருப்பம், தற்செயல் நேர்ச்சி, சூதாட்டத்தில் குருட்டுயோக எறி, குருட்டு வெற்றி முயற்சி, பார்வை, நோட்டம், விழிக்கோட்டம், பறவை எச்சம், வண்டியில் சிறிது தொலை ஏற்றியதவுதல் தொகைக்கூட்டிக் கணித்தல், பருந்தின் இணை. (பெ.) வார்த்து உருவாக்கப்பட்ட, எறியப்பெற்ற, விட்டொழிக்கப்பட்ட, ஒதுக்கித்தள்ளப்பட்ட, துறக்கப்பட்ட, வழக்கில் முறியடிக்கப்பட்ட, (வி.) எறி, வீசியெறி, விட்டொழி, நீக்கு, அகற்று, துற, வீழச்செய், விழவிடு, வீழ்த்து, வக்ஷ்க்கில் முறியடி, இடு, போடு, மேலிடு, சீட்டைப்போடு, வாக்குரிமைச் சீட்டிடு, கணி, கூட்டிக்கணி, வார்த்து உருக்கொடு, கலைத்துறையில் பண்போவியம் உருவாக்கு, ஒழுங்குபடுத்து, நடிகரை நடிப்புப் பகுதிக்குத் திட்டம் செய், நடிப்புப்பகுதியை நடிகருக்கு உறுதிச்செய்.
cast-iron, cast iron
n. வார்ப்பிரும்பு, கரிமம் பசைமம் முதலிய கரிய வகைகளை எஃகில் சேர்ப்பதினும் மிகுதியாகச் சேர்ப்பதால் மீண்டும் வேலைப்பாட்டுக்கு உதவா நிலையுடைய வார்ப்பட இரும்புக் கலவை, வார்ப்படத்தில் உருவாக்கி வார்த்த இரும்பு, (பெ.) வார்ப்பிரும்பினால் ஆக்கப்பட்ட, கடினமான, சோர்வுறாத, உறுதிவாய்ந்த, விறைப்பான, வளைந்து கொடுக்காத, மாற்றியமைக்க முடியாத.
cast-off
n. கழிபொருள், பயனற்றதென ஒதுக்கி எறியப்பட்ட பொருள், (பெ.) தூக்கி எறியப்பட்ட, ஒதுக்கப்பட்ட.
cast-steel
n. அடித்து உருவாக்கப்படாமல் வார்த்து உருவாக்கப்பட்ட எஃகு.
cast(2), v. cast
-1 என்பதன் இறந்தகால முடிவெச்சவடிவம்.
Castalia
n. கிரேக்க பழங்கதையில் பர்னாஷஸ் மலையில் செங்கதிர்த்தெய்வமான அப்போலோவுக்கும் கலைத்தெய்வ நங்கையர்க்கும் புனித ஊற்று, கவிதையூட்டு.
Castalian
a. கிரேக்க பழங்கதையில் பானாஷஸ் மலையில் செங்கதிர்த்தெய்வமான அப்போலோவுக்கும் கலைத்தெய்வ நங்கையர்க்கும் புனிதமான ஊற்றுக்குரிய, கவிதையூற்றுக்குரிய.
castanents
n. pl. காழ்மரம் அல்லது தந்தத்தால் செய்யப்பட்டுக் கிலுக்கிசையுடன் நடனங்களில் கைவிரல்களுக்கிடையே வைத்துப் பயன்படுத்தப்படும் ஒரு கைத்தாளக் கட்டை வகை.
castaway
n. புயலால் கரையில் தள்ளப்பட்டவர், உடைகலப்பட்டோர், சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டோர், துணையிலி, பழிகேடன், (பெ.) ஒதுக்கப்பட்ட, தள்ளப்பட்ட, பயனற்ற.
caste
n. சாதி, பிறப்படிப்படையான செயற்கைச் சமுதாயப் பிரிவு, ஒட்டறுத்து வாழவிரும்பும் சமுதாய வகுப்பு, தனிவாழ்வுடைய வகுப்பு, சாதி முறை, சாதிப்படி, சாதிமதிப்பு, சமுதாயத் திரிபியல் வடிவப்படிவம்.
casteless
a. சாதியற்ற, சாதியிழந்த.
castellan
n. அரண்மாடத் தலைவர், அரண்மாளிகை ஆட்சியாளர்.
castellated
a. அரண்மாடம் போன்ற கட்டடமைப்புடைய, அரண்மாளிகைபோல் கோட்டை கொத்தளக் கூடகோபுரங்களையுடைய.
castigate
v. தண்டி, கண்டித்துரை, அடித்து ஒறு, திருத்தம் செய், பாட திருத்தம் செய்.
castigation
n. கண்டித்துத் திருத்ததல், கடுந்தண்டனை, கடிந்துரை, காரசாரமான திறனாய்வு.
castigator
n. கண்டிப்பவர், கண்டனம் எழுப்புபவர்.
Castile
n. ஸ்பெயின் நாட்டின் ஒரு பகுதி.
castilian
n. ஸ்பெயின் நாட்டுப் பகுதியான காஸ்டீலுக்கு உரியவர், காஸ்டீல் வாழ்நர், காஸ்டீல் பகுதிக்குரிய செப்பமிக்க ஸ்பானிய மொழி, (பெ.) காஸ்டீல் பகுதிக்குரிய.