English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
carts-tail
n. வண்டியின் பின் பக்கம்.
cartulary
n. ஆவணத்தொகுதி, பதிவேடு, திருமடத்தின் பதிவேட்டுத் தொகுதி, ஆவணங்கள் வைத்திருப்பவர், பதிவேடு வைக்கப்படும் இடம், பதிவேடகம்.
cartwright
n. வண்டிகள் செய்யும் தச்சர்.
carucage
n. காணி வரி, ஒரு சோடுமாடு ஒரு பருவத்தில் உழக்கத்தக்க அளவு நிலத்தின் மீது விதிக்கப்பட்ட வரி.
carucate
n. ஏர்ப்பாசன அளவு, நுப்த்தில் பூட்டிய ஒருசோடு மாடுகள் விளைச்சல் பருவம் ஒன்றில் உழக்ககூடிய நில அளவை.
caruncle
n. வான்கோழி முதலிய பறவைகளின் தலையில் அல்லது கழுத்தில் இருப்பதைப் போன்ற தசைத்திரளை, (தாவ.) விதைமுடி, விதையுண்டு.
caruncular,
a. விதைமுடி போன்ற, விதைமுண்டின் இயல்பு வாய்ந்த.
carunculate
a. விதைமுண்டு உடைய, தசைத்திரளை வாய்ந்த.
carvacrol
n. துளசியினத்தின் பற்பல பூண்டுகளில் காணப்படும் பல்வலிக்குதவுகிற கெட்டிமை வாய்ந்த எண்ணெய்.
carve
v. செதுக்கு, செதுக்கி உருவாக்கு, வெட்டியமை, குடைந்து உண்டுபண்ணு, குறுக அரி, கொத்து, செதுக்கி உருவமாற்று, உருவங்கள் செதுக்கி ஒப்பனை செய், மாதிரிப் படங்களைச் செதுக்கு, இறைச்சி வெட்டித் துண்டாக்கு, வெட்டிப் பகிர், சிற்பத்தொழில் நடத்து, சிற்பவேலைச் செய்.
carvel-built
a. பலகைகள் ஒன்றன்மீது ஒன்று ஏறாமல் சம மட்டமாயிருக்கும்படிக் கட்டப்பட்ட.
carven
a. செதுக்கப்பட்ட, செதுக்கி உருவாக்கப்பட்ட.
carver
n. செதுக்குபவர், மரவேலைச் சிற்பி, சிற்பி, இறைச்சி அறுக்க உதவும் கத்தி.
carvers
n. pl. இறைச்சி அறுக்க உதவும் கத்தியும் கவர்முள்ளும்.
carving
n. சிற்பவேலை, மரத்தில் அல்லது தந்தத்தில் இழைக்கப்படும் செதுக்குவேலை, செதுக்கி அமைக்கப்பட்ட உருவம், உணவு மேசையில் இறைச்சி அறுத்தல், உணவு மேசையில் இறைச்சி அறுக்கும் கலை.
carving-knife
n. இறைச்சி அறுக்க உதவும் பெரிய கத்தி.
caryatic
a. தூணாகப் பயன்படும் பெண் உருவச்சிலை பற்றிய.
caryatid
n. சிலையுருவத் தூண், தூணாகப் பயன்படும் பெண் உருவச்சிலை.
caryopsis
n. (தாவ.) உமியுடன் ஒட்டிய தானிய வகை, முதிரை.
cascabel
n. பீரங்கியின் பின்புறக்குமிழ்.