English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cercarian
a. அட்டை வகைகளின் முட்டைப்புழு நிலைக்குரிய.
cercus
n. வால்போன்ற பின்னிணைப்பு.
cere
n. சில பறவைகளினுடைய அலகின் அடிப்பாகத்தில் காணப்படும் தோல் மூடியிராத மெழுகு போன்ற சவ்வு, (வி.) மெழுகு பூசு.
cereal
n. முதிரை, தானியம், கூலம், காலைச் சிற்றுண்டிப் பணியாரம், (பெ.) உண்ணத்தக்க கூலவகைகளுக்குரிய.
cerealist
n. கூலத்துறையில் தனி ஆய்வு நடத்துபவர், முதிரைகளை உட்கொள்பவர்.
cerebellar, cerebellous
a. சிறுமூளைக்குரிய, சிறு மூளை பற்றிய.
cerebellum
n. (ல.) தலையின் பின்பக்கத்திலுள்ள சிறு மூளை.
cereberal
a. மூளைக்குரிய, பெருமூளைப்பகுதி சார்ந்த, (ஒலி.) நுனிநா அண்ணத்தைத் தொடுவதனால் எழும் மெய்யெழுத்து ஒலிகளுக்குரிய.
cerebralism
n. மனத்தின் செயல்களெல்லாம் மூளையில் தான் தோன்றுகின்றன என்னுங்கோட்பாடு.
cerebration
n. மூளை இயக்கம், மூளை செயற்படுதல், மனத்தின் தொழிற்பாடு, எண்ணம்.
cerebritis
n. மூளை அழற்சி.
cerebro-spinal
a. மூளைக்கும் முதுகந்தண்டு வடத்துக்கும் ஒருங்கே தொடர்புடைய.
cerebrum
n. (ல.) தலையின் முன்பக்கத்திலுள்ள பெருமூளை.
cerecloth
n. தண்ணீர் புகவிடாமல் பண்டங்களைச் சுற்றுவதற்காகப் பயன்படும் மெழுகு பூசிய துணி, பிண மூடாக்கு, கல்லறை மூடாக்கு.
ceremonial
n. சடங்கு முறைமை, புற ஆசாரம், மரபு தழுவு வினை, சிறப்புக்கால நடைமுறை, ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயிலின் வினைமுறைக்குறிப்புகள் அடங்கிய சுவடி, (பெ.) வினைமுறைகளுடன் கூடிய, சடங்குகளுக்குரிய, புற ஆசாரம் பற்றிய.
ceremonialism
n. புற ஆசாரங்களைக் கடைபிடித்தல், வினைமுறை வலியுறுத்தும் பண்பு.
ceremonious
a. வினைமுறைகளுக்கு அடிமைப்பட்டுள்ள, சடங்குகளில் பற்றுள்ளவராகப் பகட்டிக் கொள்ளுகிற, வினைமுறைகளில் உன்னிப்பான, ஆசாரங்களை நுணிகிப் பின்பற்றுகிற, சடங்குகள் நிறைந்த.
ceremony
n. வினைமுறை, சமயச்சடங்கு, கரணம், புறவினை, ஒப்புக்குரிய நடைமுறை, மரியாதையான ஒழுகலாறு, உள்ளீடில்லாத வெறும் ஆசாரம், ஆரவாரம், ஆடம்பரம், புறச் செயல் முறைமை, ஆசாரங்களில் மிக்க நுட்பம் பார்க்கிற தன்மை.