English Word (ஆங்கில வார்த்தை)
									Tamil Word (தமிழ் வார்த்தை)
									
								 
								
								chalk-stone
								n. சுண்ணக்கல்.
								
							 
								chalk-stones
								n. pl. கீல்வாதம் அல்லது முடக்கு வாதத்தில் கைகால் எலும்பு இணைப்பைச் சுற்றித் தோன்றும் வெண்கசிவுப்ள்.
								
							 
								chalkiness
								n. சீமைச் சுண்ணத்தன்மை, சுண்ண வெண்மை, சுண்ணங் கலந்துள்ள நிலை.
								
							 
								chalky
								a. சுண்ணம் நிறைந்த, சுண்ண வெண்மையான, சுண்ணக்கற்கள் போன்ற, சுண்ணக் கற்களுள்ள.
								
							 
								challenge
								n. அறைகூவல், எதிர்ப்புத் தெரிவித்தல், மற்போருக்குரிய அழைப்பு, காவலாளனின் அதிகாரக் குரல், விளக்கக் கோரிக்கை, பணிமுறைக்கேள்வி, குற்றச் சாட்டு, உரிமைக்கோரிக்கை, (வி.) மற்போருக்கழை, போரிட்டு முடிவு செய்ய அழை, குற்றம் சாட்டு, எதிர்த்துரை, மறுதலி, மறுப்பைத் தெரிவி, அதிகாரத்துடன் உலாவு.
								
							 
								challengeable
								a. எதிர்ப்புக்குரிய, எதிர்ப்புக்கு ஆட்படத்தக்க.
								
							 
								challenger
								n. அறைகூவுபவர், எதிர்ப்பாளர், வினா எழுப்புபரர், கோரிக்கையாளர்.
								
							 
								challenging
								a. அறைகூவுகின்ற, போரிட அழைக்கின்ற, மறுக்கிற, எதிர்த்துக் கேட்கின்ற.
								
							 
								challis
								n. பெருமாட்டியின் உயரிய உடைத்துணி வகை, பட்டுக் கம்பளித்துணி வகை.
								
							 
								chalone
								n. செயல் தடுக்கும் உட்கசிவு.
								
							 
								chalumeau
								n. இசைக் குழல்வகை.
								
							 
								chalybeate
								n. இரும்புச் சத்துள்ள நீர், இரும்புக் கலப்புள்ள குடிவகை, (பெ.) இரும்புச் சத்துவளம் உடைய.
								
							 
								chalybite
								n. இரும்புச் சத்துள்ள விண்வீழ் கல்.
								
							 
								chamade
								n. (பிர.) சமரசப் பேச்சுக்கழைக்கும் பறையொலி, சரணடையும்படி அழைப்பு விடும் முரசறைவு.
								
							 
								chamber
								n. அறை, அரங்கு, கூடம், அறைவீடு, கூட்டம் கூடும் இடம், சட்டமன்றப் பிரிவு, நீதி மண்டபம், வாணிகம் முதலிய தனிநோக்குடன் கூடும் குழாம், உட்பிரிவு, கண்ணறை, உள்ளிடம், உட்பொள்ளல், துப்பாக்கியின் பின்புறப் புழை, சிறு பீரங்கி, நீதிமன்றத்திற்குக் கொண்டுவராத வழக்குகளை விசாரணை செய்யும் நடுவர் தனியறை, (வி.) அறையில் அடைத்து வை, கட்டற்ற களியாட்டமாடு.
								
							 
								chamber-concert
								n. அரங்கிசை நிகழ்ச்சி, துளைக்கருவிகளற்ற நரப்பிசையரங்கு நிகழ்ச்சி.
								
							 
								chamber-counsil, chamber-counsellor
								n. நீதிமன்றத்தில் வாதாடாமல் தனிப்பட்ட முறையில் சட்டக் கருத்து தெரிவிக்கும் வழக்குரைஞர்.
								
							 
								chamber-fellow
								n. அறைத் தோழர்.
								
							 
								chamber-maid
								n. வழிமனைப் பணிப்பெண்.