English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
chawl
n. தொழிலாளர் குச்சுத் தொகுதி.
chay, chaya
சாயவேர், சிவப்புச் சாயம் செய்ய உதவும் வேரினை உடைய செடி வகை.
cheap
a. மலிவான, விலை குறைந்த, நயவிலையில் விற்பனை செய்கிற, குறைந்த விலையில் கிடைக்கிற, மதிப்பை நோக்குமிடத்து விலை குறைவான, எளிதாகக் கிடைக்கிற, பயனற்ற, சிறு மதிப்புள்ள, சிறு மதிப்பீட்டுக் கணக்கிடப்படுகிற, இழிவான, கீழ்த்தரமான, பொருட்படுத்த வேண்டாத, புதுமையற்ற, கவர்ச்சியற்ற, (வினையடை) மலிவாக, எளிதாக.
cheapen
v. விலைகுறை, மலிவாக்கு, விலைமலிவாகு, மதிப்புக் குறை, விலைகேள்.
cheaply
adv. சிறுவிலையில், மிகுதி செலவின்றி, எளிதாக.
cheat
n. சூது, மோசடி, வஞ்சிப்பவர், ஏமாற்றுகிறவர், மோசம் செய்பவர், கண்டுபிடிக்கப்படாமல் ஏமாற்றுவதற்கான உரிமையுள்ள சீட்டாட்ட வகை, (வி.) ஏமாற்று, மோசம்செய், வஞ்சி, இழக்கச்செய், போக்குக்காட்டு, கழி, கடத்து, இரண்டகமாக நட, நம்பவைத்து ஏமாறச்செய்.
check
-1 n. தடை, தடுத்து நிறுத்தும் பொருள், தடுப்பமைவு, தரப்பு நடவடிக்கை, இடைத் தடங்கல், இடர்பாடு, முறிவு, தோல்வி, சதுரங்க ஆட்டத்தில் ஒருபுற ஆட்டக்காரருடைய 'மன்னர்' தாக்கப்படும் தறுவாயிலுள்ள நெருக்கடி நிலை, வேட்டை நாய் மோப்பத்தடை, பட்டியல்களின் இனங்களுக்கெதிரே இடப்படும் அடையாளக்குறி, கட்டுப்பாடு, சரிபார்த்தல், கணக்குச் சரியீட்டு முறை, எதிரிடைச் சீட்டு, பொருளகத்தில் பணம் பெறுபவர்க்குரிய அடையாளச் சின்னம், நாடக-திரைப்படக் கொட்டகைகளில் வெளிச் செல்பவர்கள் பெறும் அடையாளச் சீட்டு, சீட்டாட்டங்களில் பணத்தின் குறிப்பீடாகப் பயன்படுத்தப்படும் அடையாள வில்லை, சிற்றுண்டிச் சாலைச் செலவுப் பட்டியல், இசைப் பெட்டியில் சமட்டி, இரண்டாம் முறை அடிக்காதபடி தடுத்து நிறுத்தும் பொறி அமைப்பு, (வி.) தடு, அடக்கு, தடங்கல் உண்டாக்கு, கட்டுப்படுத்து, வேகம் தடு, நிறுத்து, சதுரங்க ஆட்டத்தில் எதிரியின் மன்னரைக் கட்டப்போவதாக அச்சுறுத்து, ஒன்றன் இயக்கத்தை திடீரென நிறுத்து, வேட்டைநாய் வகையில் வேட்டை விலங்குகளில் மோப்பம் அற்றுப் போவதனால் நின்றுப் போ, படைத்துறை மேலிடத்திலிருந்து குற்றங்காண், கண்டி, ஒப்பிட்டு சரிபார், தணிக்கை செய், சரியா என்று நன்கு ஆராய், சீட்டுத் துளையிடு, பறவை வேட்டையில் துறத்தப்பட்ட பறவை விடுத்து வேறு பறவையைத் துரத்தி வேட்டையாடு, தற்காலிக சேமகாப்புக்காக பிணைய முறிமீது பெறு, பிணைய முறிமீது கொடுத்து வை, சதுரங்க ஆட்டத்தில் எதிர் ஆட்டக்காரரின் 'மன்னர்' நெருக்கடி பற்றிய எச்சரிக்கை விளி.
check-action
n. இசைப்பெட்டியில் சம்மட்டி இரண்டாம் முறை அடிக்காதவாறு பொறியமைப்புமூலம் தடுத்து நிறுத்தல்.
check-clerk
n. கணக்கு முதலியவற்றைச் சரிபார்க்கும் எழுத்தர்.
check-key
n. கதவின் விசைத்தாழினை வெளியேயிருந்து தளர்த்தித் திறக்கும் திறவுகோல்.
check-list
n. சரிபார்ப்பதற்கான பட்டியல்.
check-nut
n. தடுப்பு மரை, மரை கழன்று போகாதவாறு அதன்மேல் இறுக்கமாகத் திருகப்படும் மற்றொரு அமைவு.
check-rein
n. குதிரை தலைகுனியாதபடி செய்யும் கடிவானவார், குதிரையின் கடிவாளத்தை அடுத்த குதிரையின் வாய்முள்ளுடன் இணைக்கும் வார்.
check-string
n. வண்டியை நிறுத்துமாறு வலவனுக்குப் பிரயாணி உணர்த்துவதற்குரிய அமைவின் கயிறு.
check-taker
n. கொட்டகை அடையாளச் சின்னம் திருப்பி வாங்குபவர்.
check-till
n. கடைகளில் பெற்றுக்கொள்ளப்படும் தொகைகளைப் பதிவு செய்வதற்கான அறைப்பெட்டி.
check-up
n. சோதிப்பதற்கான நுண்ணாய்வு.
check-weigher
n. சுரங்க வாயிலில் நிலக்கரியின் எடையைச் சரிபார்ப்பவர்.
checker
-1 n. தடங்கல் செய்பவர், கண்டிப்பவர், நுழைந்தாய்பவர்.
checker-board
a. பல்வண்ணக் கட்டங்கள் வாய்ந்த ஆட்டப்பலகை.