English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
daub
n. சரவையான வண்ணப்பூச்சு, பூசப்படும் பொருள், (வினை) களிமண் முதலியவை கொண்டு பூசு, நீறு பூசு, மெழுகு போன்ற பொருளை மேலே அப்பி அடையவை, அழுக்காக்கு, கறைப்படுத்து, பரும்படியாக வண்ணம் பூசு.
dauber
n. பூசிமெழுகுபவர், சரவையாக வண்ணம் பூசுபவர். கலைப்பண்பற்ற ஓவியர்.
daughter-in-law
n. மப்ன் மனைவி, மருமகள், மருகி,
daughter.
மகள், புதல்வி, பெண் குழந்தை, பெண்பால் மரபு வழித்தோன்றல், குடும்பப் பெண் உறுப்பினர், குழத்தின் பெண் உறுப்பினர், பெண்பாலர், அணங்கு, ஒருவரின் ஆன்மீக வாழ்வின் விளைவான மாது, ஒன்றன் அறிவால் விளைவான அணங்கு, வருவிளைவின் உருவகம், (பெயரடை) (உயி) வழித் தோன்றிய, வழிஉருவான.
daughterly
a. மகள்போன்ற, மகளுக்கு உரித்தான.
daunt
v. ஊக்கமிழக்கச் செய், அச்சுறுத்து, அடக்கு, உணவுக்குரிய மீன் வகையை மிடாவில் வைத்து அழுத்து.
dauntless
a. இடுக்கணழியாத, அஞ்சாத, விடாமுயற்சியுடைய.
dauphin
n. பிரான்ஸ் நாட்டு மன்னரின் மூத்த மகன்.
dauphinessr
n. பிரான்ஸ் நாட்டு மன்னரின் மூத்தமகனுடைய மனைவி.
davenport
n. எழுதுவதற்குதவும் ஒப்பனை வேலைப்பாடுள்ள சிறு சாய்வு மேசை.
davenport-trick
n. சுற்றிக்கட்டியுள்ள கயிறுகளினின்றும் விடுவித்துக்கொள்ளும் வகைமுறை.
David and Jonathan
n. பற்றுறுதி கொண்டுள்ள இரு நண்பர்கள், இணைபிரியாத ஈடுபாடுடைய இரு தோழர்கள்.
davit
n. நங்கூரத்தை மேலே தூக்குவதற்காக் கப்பலின் முன்புறத்தில் அமைந்துள்ள பாரந்தூக்கிப்பொறி, கப்பலின் படகை இறக்குவதற்கான பாரந்தூக்கிகள் இரண்டிலொன்று.
Davy Jones
n. கப்பலோட்டிகள் வழக்கில் கடலின் பேயாற்றல்,
Davy Joness locker
கடலில் மூழ்கியவர்களின் கல்லறையாகிய ஆழ்கடல்.
Davy, Dav;y lamp
n. நிலக்கரிச் சுரங்கத்தினுள் வேலை செய்பவர்களுக்குரிய கம்பி வலையுள்ள காப்பு விளக்கு.
daw
n. காக்கையினப் பறவை வகை.
dawdle
n. மடியன், சோம்பித்திரிபவன், (வினை) பயனற்ற செயல்களில் காலத்தை வீணாக்கு, சோம்பித்திரி.
dawn
n. விடியல், புலரி, விடியலொளி, தொடக்க ஒளி, முழ்ல் தோற்றம், தொடக்கம், (வி) பொழுது புலர்வுறு, பகலொளி தொடங்கு, ஒளிவளரத் துவங்கு, தோற்றத் தொடங்கு.