English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
dope
n. கெட்டி நீர்மம், களிம்பு, எண்ணெய்ப்பசை, மசக்கெண்ணைய், விமானப்பூச்சுக்குரிய வண்ணமெருகு, உறிஞ்சுபொருள், ஆற்றல் பெருக்கும் சரக்கு, மயக்க மருந்து, அபின், பந்தயக்குதிரைகளுக்கும் வேட்டை நாய்களுக்கும் வெற்றிபெறும் ஆற்றல் பெறுவதற்காக அளிக்கப்படும் மருந்து, அறிவை மழுங்கவைக்கும் செய்தி, மனச்சான்றை மழுஙகவைப்பது, உள்ளுணர்ச்சியை மழுங்கவைப்பது, தகவல், கம்பியில்லாத் தந்திச்செய்தி, (வினை) மயக்க மருந்து கொடு, மயக்க மருந்து கொடு, மயக்கமூட்டு, மயக்கமருந்தை உண்.
doppel-ganger
n. பேயுரு, உயிரோடு இருப்பவரின் ஆவித்தோற்றம்.
Dopper
n. ஆலந்து நாட்டு முனைந்த சீர்திருத்தத் திருச்சபையுடன் இணைந்த தென் ஆப்பிரிக்காவின் திருச்சபையைச் சார்ந்தவர்.
dopy, dopey
மயக்கம் தருகிற, உணர்வுமழுங்கப்பட்ட, மனச்சான்று மங்கிய.
dor
n. சாணி எருவில் வாழும் விட்டில் வகை.
Dora
n. போர்க்காலக் கட்டுப்பாட்டுசட்டம்.
dorado
n. அழகிய வண்ணமுள்ள கடல்னீன் வகை, அமெரிக்க பொன்வண்ண மீன்வகை.
Dorcas, Dorcas society
n. ஏழைகளுக்கு உடைகள் தைத்து வழங்கும் பெண்கள் கூட்டம்.
Dorian
n. பண்டைக் கிரேக்கநாட்டில் டோரிஸ் என்ற பகுதி சார்ந்தவர், கிரேக்க இனத்தின் முப்பெரும் பிரிவில் ஒன்றைச் சார்ந்தவர், (பெயரடை) டோரிஸ் பகுதியைச் சார்ந்த.
Doric
n. பண்டைக் கிரேக்கரின் முப்பெரும் பிரிவினுள் ஒன்றினுக்குரிய கிளைத்திசைமொழி, நாட்டுப்புற ஆங்கிலத் திசை மொழி, நாட்டுப்புற ஸ்காத்லாந்து வழக்கு மொழி, (பெயரடை) கட்டிடக் கலையில் பண்டைய கிரேக்க மரபு வகைக்குரிய, டோரிஸ் பகுதிக்குரிய, கிரேக்க திசைவழக்குக்குரிய, கிரேக்க இனத்தின் முப்பெரும் பிரிவுபளில் அன்றற்குரிய.
dorking
n. கோழி வளர்ப்பினவகை, பலவண்ணங்களும் ஒவ்வொரு காலில் ஐந்து நகங்களும் கொண்ட சதுர உடலமைப்புள்ள கோழிவகை.
dormant
n. குறுக்குவிட்டம், பாவுகட்டை,(பெயரடை) உறங்குகின்ற, செயலற்ற, செயலடங்கியிருக்கிற, செயல் நிறுத்தி வைத்திருக்கிற, செடியின உயிரின வகைகளில் சறிகுயில் நிலையிலுள்ள, இயக்கம் ஒடுங்கிக் கிடக்கிற, பழக்கத்தில் இல்லாத, வழக்கற்ற, (கட்) தூங்கும் தோற்றமுடைய, முன்கால்கள்மீது தலைசாய்த்திருத்திருக்கிற.
dormer, dormer-window
n. சாய்கூரையில் செங்குத்தாக உந்திக்கொண்டிருக்கும் பலகணி,
dormeuse
n. பயண உறக்கவண்டி, சாய்படுக்கை வகை.
dormitory
n. பலபடுக்கைகள் கொண்டட பெரிடிய துயிற்கூடம், நகர்ப்புற ஓய்வுக்குடியிருப்புப் பகுதி.
dormouse
n. குளிர்கால முழுதும் சுருண்டு செறிதுயில் நிலையிட அடங்கிக்கிடக்கும் அணில் வடிவ எலியின உயிர்வகை.
dormy
a. குழிப்பந்தாட்டத்தில் மேற்கொண்டு ஆட வேண்டிய ஆட்ங்களுக்குச் சரியான குழிகளையுடைய.
dorothy bag
n. பெண்களின் திறந்தகன்ற வாயுடைய கைத்தொங்கற் பை.
dorp
n. ஆலந்து நாட்டிலும் தென் ஆப்பிரிக்காவிலும் சிற்றுர், நகர்வட்டம்.
dorsal
n. மீனின் முதுகுத் தடுப்பு, முதுகுத்தண்டிலுள்ள முள்ளெலும்பு, திருக்கோயில் கிழக்குச் சிறகின் பக்கத்திரைச் சீலை, (பெயரடை) பின்புறத்தைச்சார்ந்த, முதுகைச்சார்ந்த, கூர் விளிம்பு வரையுடைய.