English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
dorsigrade
a. கால்விரல்களின் பின்பகுதியால் நடக்கின்ற.
dorter, dortour
படுக்கையறை, கிறித்தவத் துறவி மடத்தின் படுக்கையறைக் கூடம்.
dory
-1 n. உணவுக்கு உதவும் பொன் மஞ்சள் வண்ண மீன் வகை.
dosage
n. மருந்தளவு,. வேளாவேளைக்கு மருந்து கொடுத்தல், வேளாவேளைப்பழக்கம், (வினை) மருந்துகொடு, கல, வேளை அளவுகளாகக் கொடு, வேளையளவுகளாகக் கொடுக்கும்படி கட்டளையிடு.
dose
n. ஒருவேளை மருந்து, ஒரே நேரத்தில் வழங்கப்படும் மின்விசை, நுண் அலை ஒளிக்கதிர் முதலியவற்றின் அளவு, சிறிதளவு, மென்புகழ்ச்சிக்கூறு, படிப்படியாக அடுக்கப்படும் தண்டனையின் கூறு, அளவிட்டுக் கொடுக்கப்பட்ட கூறு, அளந்து சேர்க்கப்பட்ட பகுதி, உட்கொள்ள வேண்டிய வெறுப்பூட்டும் மருந்து, விரும்பாத பொருள்.
doss
n. தூக்கம், (வினை) தூங்கு, படுக்கைக்குச் செல், பொது உறைவிட விடுதியில் தூங்கு.
doss-house
n. மிக மலிவான தங்கிடம்.
dossal.,dossel
திருக்கோயில் பலிபீட மேடையின் பின்புறம் தொங்கும் திரைச்சீலை,. திருக்கோயில் கிழக்கப் பக்கத்திரைத்துணி.
dosser
n. மிக மலிவான தங்கிடத்தில் வசிப்பவர்.
dossier
n. ஆவணத்தொகுதி, ஒருவரது சென்றகால வரலாற்றுப் பத்திரங்கள்.
dot
-1 n. புள்ளி, சிறுதுகள், மாசு, மைக்கோலின் வட்ட, வடிவப்பகுதி, முற்றுப்புள்ளி, எழுத்துக்களின் மீதிடும் ஒற்று, எழுத்தின் ஒலிமாறுபாடு குறிக்கும் புள்ளிக் குறி, இசைமானப் புள்ளிக் குறி, தந்திக்குறியீட்டில் புள்ளிக்குறி, நுண்பொருள், சிறுகுழந்தை, (வினை) புள்ளி அடையாளவிட, எழுத்தின்மீது புள்ளியிடு, புள்ளிகளாற் பலதிறப்படுத்து, குறிப்பு வைத்துக்காள், புள்ளி சிதறச் செய், புள்ளி நிரப்பு, புள்ளிகள் போடு, புள்ளியுருவாகு, நொண்டு.
Dot matrix printer
புள்ளி அச்சுப்பொறி
dot-wheel
n. புள்ளி புள்ளியான கோடு போடுவதற்குப் பயன்படும் சக்கரம்.
dot, -and-dash
தந்திக் குறியீட்டுத் தொகுதியில் புள்ளிகீற்றுகளைப் பயன்படுத்தும் முறை.
dotage
n. மிகையான அன்புகாட்டுதல், மிகையான பற்று, அளவு கடந்த அன்பு, முதுமையால் ஏற்படும் சிறுபிள்ளைத்தனம், முதுமையால் தோன்றும் மனத்தளர்ச்சி.
dotal
a. சீதனத்தைச் சார்ந்த.
dotard
n. மட்டுமீறிய பற்றுக் காட்டுபவர், முதுமைத் தளர்ச்சியுடையவர்.
dote
v. மட்டுமீறிய அன்புகாட்டு, செல்லங்கொடு, தன்மையிழந்து பற்றார்வங்காட்டு, பாசம் முழுதும் ஒரு திசையிற் செல்லவுடு, ஒன்றன்மீது பித்தாகப் படர்வுறு, முதுமைத் தளர்வுறு, அறிவுச் சோர்வுறு, வெட்டு மரவகையில் இற்றுப்போ, மட்குறு.
dotted
a. பள்ளியிடப்பட்ட, புள்ளிக்குறியுடைய, புள்ளி நிரம்பிய, புள்ளிகளாலான, புள்ளிகள்போலச் சிதறலான.
dottle
n. சுருட்டுக் குழாயிற் புகைக்கப்படாமல் எஞ்சியுள்ள புகையிலைச் சுருகு.