English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
drag-chain
n. சக்கரத்தின் இயக்கததைத் தடைப்படுத்தும் பொறியாகப் பயன்படுத்தப்படும் சங்கிலி,. இருப்பூர்தி வண்டிகளை இணைப்பதற்கான சங்கிலி.
drag-man,
n. இழுவலையைப் பயன்படுத்துஞ் செம்படவர்.,
drag-net
n. இழுவலை, நீருக்கடியில் அல்லது தரைநெடுக இழுப்பதற்குரிய வலை.
dragee
n. மருந்து-பொட்டை-பழம் முதலியவற்றைப் பொதித்துள்ள தின்பண்ட வகை.
draggle
v. தரையின்மேல் இழுத்து நனைத்து அழுக்காக்கு, தரையின் மேல் நனைந்து தொங்கிக்கொண்டே இழுபட்டுச் செல், பின்தங்கு, பின்தங்கித் திரி.,
draggle-tail
n. தூய்மையற்றவள், பாங்கற்றவள், சீர்கேடி,.
draghound
n. மோப்ப நெறியைப் பின்பற்றிச் செல்லப்பழக்கப் பெற்றுள்ள நரிவேட்டை நாய்.
dragoman
n. கீழைநாடுகளில் உள்ள மொழிபெயர்ப்புத் துணைவர், வழிகாட்டி.
dragon
-2 n. புராணக்கதைகளில் விலங்கு பறவை பாம்பு முதலை ஆகியவற்றின் தோற்றம் கலந்த நெருப்புயிர்க்கும் பற்ரிய விலங்கு வகை, வேதாளம், அச்சந்தரும் மனிதர், விழிப்பாயுள்ளவர்.பெண்ணினத்தின் பாதுகாவலர், விழிப்பாயுள்ளவர், பெண்ணினத்தின் பாதுகாவலர் வளர்ப்புத்தாய், பட்டம், காறாடி, (வில) மரம்வாழ், சிறு பல்லிவகை, பறாவகை, மருந்துச்செடியின் வகை.
dragonnade
n. பிரான்சில் பதினான்காம் லுயி மன்னர் ஆளுகையில் குதரைப்படைத் துப்பாக்கிவீரர்களைக்கொண்டு புரோட்டஸ்டாண்டுகள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறை, (வினை) படைவீரர்களை ஏவி அடக்கும் முறை அட்டுழியம் செய்.
dragons-blood
n. குங்கிலிய வகை.
dragoon
n. குதிரைப்படைவீரன், மூர்க்கத்தனமானமுரடன், நெருப்புமிழும் புறாவகை, பழங்காலக் கைத்துப்பாக்கி, படைவீரர்களை ஏவி அட்டுழியம் செய், துன்புறுத்தி வலுக்கட்டாயப்படுத்து.
dragsman
n. அஞ்சல்வண்டி வலவர்.
drail
n. மீன்பிடிக்ககையில் நீரினுடே ஆழத்திற்போட்டு இழுப்பதற்காக ஈயத்துண்டு கட்டியுள்ள முள்ளுடன் கூடிய தூண்டிற் கயிறு, கலப்பையில் குதிரைகள் பூட்டப்படும் இரும்புத் நுகம், (வினை) தரைலமேல் இழுபட்டு நனைந்து அழுக்காகு.
drain
n. நீர்க்கால், வடிகால், கால்வாய், சாக்கடை, குழி, பள்ளம், இடைவிடாத செலவழிவு, ஓஸ்ப்புறப்போக்கு, வலுக்கேடு, அறுவையில் கட்டி முதலியவற்றிலிருந்து சீழ் அழுக்குநீர் ஆகியவற்றை வடிப்பதற்கான குழல், (வினை) படிப்படியாக வடித்தெடு, வடிகட்டு, குழாய், வழியாக வடி, நீர் முதலியவற்றைப் பருகு, கலத்தை வெறுமையாக்கு, நிலம் முதலியவற்றில் நீர்போக்கு, மிகைநீரை வெளியே கொண்டு செல், உடைமை இழக்கச்செய், கசிந்தொழுகு, ஆற்றல் இழக்கச் செய், பிலிற்று, பாய், ஈரம், போக்கு, நீர்ப்பொருள் வடிவதற்குத் துணைசெய்.
drain-trap
n. தீவளி வெளிச்செல்ல விடாமலே வடிநீர் விழும்படியாக அமைக்கப்பட்டுள்ள சாக்கடை அமைவு.
drainage
n. வடிமானம், வடிகால்களின் அமைப்பு, நீர்த்தாரை ஏற்பாடு, வடிக்கப்படும் பொருள், சாக்கடை நீர்.,
drainage-basin
n. ஆற்றினால் மிகைநீர் வடிக்கப்பெறும் நிலப்பரப்பு.
drainage-tube
n. சீழ் முதலியவற்றை வடித்தெடுப்பதற்கான குழல்.