English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
duplicity
n. வஞ்சகம், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல், இரண்டகம்.
dura mater
n. மூளையம் முதுகுத் தண்டையும் சூழ்ந்துகொண்டிருக்கும் உறுதியான மேல் சவ்வு.
durable
a. நிலைத்து நிற்கக்கூடிய, நீடித்து உழைக்கக் கூடிய, தேய்மானத்தை எதிர்த்து நிற்கிற, சேதாரத்தைத் தடைசெய்கிற.
duralumin,duraluminium
n. வலிவலுமினியம், வானுர்தி முதலியவற்றிற்குப் பயன்படும் வலிமையும் கடினமும் உள்ள அலுமினிய கலவைப் பொருள்.
duramen
n. காழ்மரம், மரவகையின் வைரம் பாய்ந்த உட்பகுதி.
durance
n. சிறைவைப்பு, சிறைக்காவல்.
duration
n. காலத்தொடர்ச்சி, கால நீட்சி, கால வரையறை, வரையறைப்படாக்காலம், தொடர்ந்திருக்கும் ஆற்றல்.
durbar
n. கொலுவிருக்கை, ஓலக்கம், அரசுப் பேரவை கூடும் மண்டபம், வரவேற்புக்கூடம், வரவேற்பு விழா.
duress, duresse
கட்டாயச் சிறை வைப்பு, வலுக்கட்டாயம், கட்டாயப்படுத்துதல், வற்புறுத்தல்.
durian
n. கெட்ட நாற்றமும் நறுஞ்சுவையுமுள்ள பழவகை, பழமரவகை.
during
prep. நேரத்தினிடையே, நேரமுழுதும் தொடர்ந்து.
durmast
n. சிந்தூர மரவகை.
durst
v. 'டேர்' என்பதன் இறந்த கால வினைவடிவங்களில் ஒன்று.
dusk
n. அரையிருள், ஒளிமறைவு., படர்நிழல், சந்தி, பொழுதுமயங்குவேளை, (பெயரடை) இருளார்ந்த, (விளை) அரையிருளாகு, நிழலாகு, ஒளிமங்குத.
dusky
a. மங்கலான, தௌிவில்லாத, கருநிறமான, துயரமான, சோர்வான.
dust
n. துகள், பொடி, அணு, தூசி, மலர்த்துகள், தூளிப்படலம், தூள், தூசு, மண், நிலம், கல்லறை, இறந்தோர் உடல், மனித உடல், மனிதன், மாசு, குப்பை, இழிவு, தாழ்நிலை, பொன்துகள், பணம், விரைவு, சச்சரவு, குழப்பம், (வினை) தூசிதுடை, தூசியடித்து நீக்கு, தூசி, துடைத்துத் துலக்கு, தூள் தூவு, தூசியை மேலேதூவிக்கொள், தூசியில் முழுகு, தூசி படிய வை.
dust-bin
n. குப்பைத்தொட்டி.
dust-bowl
n. புயல்காற்று தாக்கும் பஞ்சப்பகுதி, வறட்சியாலும் நீடித்த பயிர்விளைவின் வளக்கேட்டினாலும் தரிசுபட்டுப் புழுதிக்காடான பாலைநிலம்.
dust-brand
n. பயிர்நோய் வகை.