English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
want
n. இல்லாமை, இலம்பாடு, வறுமை, இல்லாக்குறை, குறை, குறைபாடு, முடை, தேவை, கடுந்தேவையுணர்ச்சி, கடுந்தேவைப்பொருள், வல்விருப்பம், வேணவா, வேணவாப்பொருள, (வினை.) இல்லாதிரு, குறைவுறப்பெறு, குறிப்பிட்ட அளவில் குறைபடு, இன்மையுணர், இல்லாது அவதிப்படு, கடுந்தேவைப்படு, வேண்டுமென்று கோர, வேண்டு, பெறவிரும்பு, விருப்பங்கொள், வேணவாவுறு.
wanted
a. மிகவும் விரும்பப்பட்ட, மிகவும் தேவைப்பட்ட, தேவையாக நாடப்பட்ட, பற்றாக் குறையாக உணரப்பட்ட, வேண்டுமென்று கோரப்பட்ட, பணி நிரப்பீடு வகையில் தேவைப்பட்ட, மிகுதி நாடப்பட்ட, காவல் துறையினரால் முனைப்பாகத் தேடப்பட்ட.
wanter
n. வேண்டுபவர்,தேவையாளர்.
wanting
a. தகுதியில் குறைபட்ட, பண்பு வகையில் போதாத, இல்லாக்குறையுடைய, போதாக்குறையுடைய, (பே-வ) அறிவுபற்றாத, இல்லாமல், குறிப்பிட்ட அளவில் குறைபட்டு, குறைபட.
wanton
n. ஒழுக்கங்கெட்டவன், (அரு.) ஒழுக்கங்ரகெட்டவர், (அரு.) குறும்புச் சிறுவர், (பெ.) விளையாட்டு விருப்ப மிக்க, குழந்தை வகையில் குதித்து விளையாடுகிற, சிறு விலங்குகள் வகையில் குதியாட்டமிடுகிற, காற்று வயல் வெறியாட்டமாடுகிற, மனப்பாங்கு வகையில் கட்டுக்கடங்காத, பொறுப்பற்ற, சிறுபிள்ளைத்தனமான, கட்டுப்பாடற்ற, வரம்பற்ற, நெறிப்படாத, ஒரு நிலையற்ற, ஒழுங்கு முறைமை கெட்ட, ஒழுக்க வரம்பற்ற, கட்டுப்பாடுகளை மதியாத, நன்னடத்தையற்ற, அடாவழியான, காமவெறி பிடித்த, குறிக்கோளற்ற, நோக்கமற்ற, கொள்கையற்ற, தூண்டுதலுக்குரிய காரணமில்லாத, அடங்கொண்ட, ஒருதலை முடிவான, தன்முனைப்பான, ஆணவமான, (செய்.) காட்டு வளர்ச்சியுடைய, கொழு கொழு வளர்ச்சியான, (வினை.) விளையாடு, துள்ளிக்குதி, குதித்து விளையாடு, மனம்போனபடி ஆடு, ஆட்டமிடு, ஆணவம் பிடித்தலை, சிற்றின்பப் பற்றுடன் செயற்படு.
wants,
n pl. அவாக்கள், தேவைகள்.
wapentake
n. உள்வட்டகை, இங்கிலாந்த நாட்டுப்பகுதியின் முற்கால வட்ட உட்பிரிவு.
wapiti
n. பெரிய வடஅமெரிக்க கலைமான் வகை.
Wappenschaw, Wappenshaw
n. ஸ்காத்லாந்து வழக்கில் படைவீரர் ஆண்டு அணிவகுப்பு, துப்பாக்கி வீரர் கூட்டணி.
war
n. போர், யுத்தம், நாடுகளிடையே பகைமைத் தாக்கு, எதிர்த்தாக்கு நடவடிக்கைகளின் தொகுதி, நீடித்த பகைமை, போராட்டம், (வினை.) (பழ.) போர்புரி யுத்தம் செய், போரிட்டு அடக்கு, போட்டியிடு, பூசலிடு.
war-cloud
n. போர் மேகங்கள், போர்வரும் என்ற அச்சம் தரும் குறிகள்.
war-drum
n. போர் முரசு, போர் முரசொலி.
war-game
n. படையாட்டம், கட்டங்களில் மரக்கட்டைகளைப் போர் வீரர்களாகக் கொண்டு ஆடப்படும் ஆட்ட வகை.
war-god
n. போர்த்தெய்வம்.
war-hawk
n. போர் ஆர்வலர், போர் வெறியர்.
war-head
n. நீர் முழ்கிக் குண்டின் வெடிப்பு முனைப்பகுதி, வெடிக்கல் வெடிப்புப் பகுதி.
war-lord
n. படைத்தளபதி, பெரும் போர்வீரத் தலைவர்.
war-note
n. போர் அழைப்புக் குறிப்பு, போருக்கு வரும்படி அழைப்பு.