English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
war-paint
n. பழங்குடிமக்கள் போர்க்குரிய மேனிவண்ணப் பூச்சு, போர்க்கோலம், போர்முறை உடை.
war-path
n. படையெழுச்சிப்பாதை, அமெரிக்க செவ்விந்தியரின் போரெழுச்சிப்போக்கு, போரெழுச்சி.
war-plane
n. போர்விமானம்.
war-song
n. போர்ப்பாடல், பரணி.
war-whoop
n. அமெரிக்க செவ்விந்தியரின் போர்க்கூக்குரல்.
war-worn
a. போர் அனுபவமுடைய, போரால் பாழடைந்த.
warble
-1 n. பாடும் புள்ளிசைப்பொலி, நீள் அதிர்குரல் பண்ணிசைப்பு, (வினை.) பாடும் புள் வகையில் நீளதிர் குரல் இசைப்பொலியுடன் முரலு, நீளதிர் குரல் எடுத்து இசை, தனி நீளதிர் குரலில் பாடு, முரலு, மென்குரலில் பாடு, புள்ளிசைப்புக் குரலுடன் பேசு, மெல்லிசைக் குரலுடன் கூறு, பாடு, பாட்டுப் பாட, கவிதையியற்று.
warble-fly
n. கழலை உண்ணி.
warbler
n. பாடும் பறவை, பாடுபவர்.
ward
n. இளங்கணர், முதுகணாளரின் பாதுகாப்பில் இருப்பவர், முதுகண்மை, முதுகணாளர் மேற்பார்வை, நகர்வட்டம், நகரின் உட்பிரிவு, கூடம், சிறை-மருத்துவமனை-ஏலார் விடுதி ஆகியவற்றின் பிரிவு, மருத்துவமனைப் படுக்கைத்தொகுதி, காவல் பாதுகாப்புக் கவனிப்பு, காப்பாரண் மாளிகைக் காவற்கூடம், (பழ.) வாட்போரில் தடுப்பு முறை, (அரு.) முதுகணாளர் பாதுகாப்பு, (அரு.) சிறைகாப்பு, சிறைகாவலீடு, (வினை.) வாட்போரில் தடுப்பு முறை கையாளு, எதிர்த்துத் தாக்கிக் தடு, தடுத்துக் காப்பாற்று, கடவுள் வகையில் தடுத்தாளு, காத்தமை, தடுப்புக்காப்புநிலையில் போரிடு, பாதுகாப்புப் போரிடு, கூடத்தில் வை, கூடத்தில் அமர்வி.
ward-mote
n. நகர வட்டக் கிளைமன்றம்.
warden
-1 n. பாதுகாவலர், எல்லைக்காவலர், அரண் காவலர், துறைமுக ஆட்சிக்காவலர், போர்க்கால விமானத் தாக்கு நேரப் பொதுநிலைப் பாதுகாப்பு முறையாளர், சிறைக்கூட மேற்காப்பாளர், மாணவர் இல்ல மேற்பார்வையாளர், கல்வி நிறுவனப் பொதுப் பொறுப்பாளர், (அரு.) காவல் நிலையினர், நிலைகாவலர்.
warder
n. தண்டக்கோல், அரசர் தளபதி முதலியோரின் மேலுரிமைச் சின்னமான கைத்தடி, ஆணைக்கோல், அரசர் தளபதி முதலியோரின் ஆணைச் சமிக்கைகளுக்குப் பயன் படுத்தப்படும் கைப்பிரம்பு, (பழ.) சிறைக்காவலர்.
wardog
n. முதிய போர்வீரர்.
Wardour Street
n. பழங்கலைத் தட்டுமுட்டுப் பொருள்கள் விற்கும் லண்டன் நகர வீதி, திரைப்படத் தொழில்.
wardress
n. சிறைக்காப்பாண்மை மாது.
wardrobe
n. துணிமணி நிலையடுக்கு, ஆடை அலமாரி, துணிமணித்தொகுதி.
wardroom
n. போர்க்கப்பலில் ஆணைபெற்ற அதிகாரிகளின் அறை.
wards
n. pl. பூட்டு தாழ்க்கோல் தனிநிலை அமைவு.
wardship
n. இளங்கண்மை, மற்றொருவரின் பாதுகாப்பிலிருக்கும் நிலை.