English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Lasso
n. கால்நடைகள் முதலியவற்றைப் பிடிக்கப் பயன்படும் தோல்வார்ச் சுருக்குக் கண்ணி.
Last
-1 n. கடைசிஆள், இறுதியில் குறிப்பிடப்பட்டவர், கடைசிப்பொருள், இறுதியில் குறிப்பிடப்பட்டது, இறுதிநாள், இறுதி நேரம், கடைசி, இறுதி, சாவு, இறப்பு, இறுதியான ஒன்று, கடைசிச்செயல், (பெ.) கடைசியான, முடிவான, எல்லாவற்றிற்கும் பின்னான, இறுதியாக வரகிற, வாழ்க்கையின் முட
Last
-2 n. வீரியம், நீடுழைப்பாற்றல், செடாது நீடித்துப் பயன்படும் பண்பு, (வினை) நீடித்துழைப்பதாயிரு, கெடாதிரு, அழியாதிரு, செல்வாகாதிரு, உயிருடனிரு, போதியதாயிரு, தேவைக்குச் சரியாயிரு.
Last
-3 n. புதைமிதியடி செய்வதற்குரிய படியுருவக்கட்டை.
Last
-4 n. வாணிக எடையளவு, வாணிகக் கன அளவை, இடத்துக்கும் சரக்குக்கும் ஏற்ப மாறுபடும் வாணிகப் பரும அளவை.
Lasting
n. நெட்டுழைப்புத் துணி வகை, (பெ.) நீடித்திருக்கிற, நிலைத்த, நிலைபேறுள்ள, நீடித்து உழைக்கக்கூடிய.
Lat
n. பத்து ஆங்கில பென்னி மதிப்புடைய லாட்வியா நாட்டின் பொன் நாணய மூல அளவு.
Latakia
n. கலவைப் பொருள்களில் பயன்படுத்தப்படும் துருக்கிப் புகையிலை வகை.
Latch
n. புறவிசைக் கொண்டி, பொறித்தாழ்ப்பாள், புற விசைப்பூட்டு, கதவின் விசையடைப்பு, (வினை) பொறித்தாழ்ப்பாளிடு, விசைத் தாழ்ப்பாளிட்டுப் பூட்டு.
Latchet
n. புதைமிதியடியின் தோல்வார் இழை.
Latchkey
n. விசைத்தாழ்த் திறவுகோல்.
Late
n. அணிமைக்காலம், (பெ.) தாமதமாமன, பிந்திய, சுணங்கிய, உரியகாலங் கடந்த, காலங்கடந்துநிகழ்கிற, எதிர்பார்த்த காலத்துக்குப் பிற்பட இயலுகிற, முடிவுநோக்கி நெடுந்தொலை சென்ற, இறுதிக்கு அணித்தான, நெடுநாட்கடந்த, நடுப்பருவங்கடந்த, வேளைகடந்த, காலந்தாழ்தற்குரிய, பொழுதுசென்ற, பொழுதேறிய, வழக்கமான நேரங்கடந்த, பின்னடைந்த, பிற்பட்ட, பிற்காலத்திய, பணி ஓய்வுற்ற, அணிமையில் மறைவுற்ற, அணிமையில் நிகழ்வுற்ற, கழிந்த, (வினையடை) காலந்தாழ்த்து, சுணங்கி, தாமதமாக, உரியகாலத்துக்குப்பின், பிந்தி, மிகவும் பிற்பட்டு, காலங்கடந்து, பொழுதேற, வேளைகடந்து நெடுநேரமாக, அணிமையில், முன்பெல்லாம், அணிமைக் காலங்களில், காலஞ்சென்று, பிற்பட்டு, பருவங்கடந்து, பிற்பட்டபடியில், நம் காலத்தை எட்டிய நிலையில்.
Lateen
a. (கப்.) பாய்மரத்திலிருந்து 45 பாகைக் கோண அளவுடைய முக்கோண அமைப்புள்ள, 45 பாகைக் கோண அளவுடைய முக்கோண அமைப்புடைய பாய்மரம் கட்டப்பட்டுள்ள.
Lately
adv. சிறிது காலத்திற்குமுன், அணிமையில், அணிமைக் காலங்களில்.
Laten
v. பிற்படு, சுணங்கு.
Latent
a. மறைந்திருக்கிற, வௌதப்படாத, உள்ளார்ந்த, உட்செறிவான வௌதயிற் காணப்படாத, முதிர்வுறாத, இயக்கமில்லாத, புதைவியல்புடைய, மறை தன்மையுடைய.
Lateral
a. பக்கக் கிளை, பக்கக்கிளையுறுப்பு, புடைப்பொருள், (பெ.) பக்கத்திலுள்ள, புடைநிலையான, பக்கத்திலிருந்து இயங்குகிற, பக்கம் நோக்கி செல்கிற.
Lateran, the Lateran.St. John Lateran
n. ரோமாபுரியிலுள்ள தூய யோவானின் கிறித்தவ தலைக்கோயில்.
Laterite
n. வெப்பமண்டலச் சாலையமைப்பிற் பயன்படுத்தப்படும் செவ்வண்ண இரும்பகக் களிமண்.
Latex
n. (தாவ.) இரப்பர் மரப்பால்.