English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Lechery
n. சிற்றின்ப நடத்தை, ஒழுக்கங்கெட்ட தன்மை.
Lectern
n. திருக்கோயில் மேடையின் சாய்மேசை.
Lection
n. பாடம், பாடபேதம்.
Lectionary
n. கிறித்தவ திருக்கோயில் வழிபாட்டில் படிக்கப்படும் மறைநுற் பகுதித்திரட்டு, மறைவாசகப் பகுதிப்பட்டியல்.
Lecture
n. சொற்பொழிவு, விரிவுரை, பேச்சு, போதனை, அறிவுரை, கண்டனவுரை, (வினை) சொற்பொழிவாற்று, கல்லுரி அல்லது பல்கலைக்கழக வகுப்பில் பெருஞ்சொல்லாற்று, சொற்பொழிவாற்றிப் பாடங்கற்பி, அறிவுரை பகர், கண்டி.
Lecturer
n. சொற்பொழிவாளர், விரிவிரையாளர், அறப்போதகர், இங்கிலாந்து மாநிலத் திருச்சபைச் சார்பில் பொது நிதித் திரட்டுதவி மூலம் ஆதரித்து நடத்தப்பட்ட போதகர் குழுவினர்.
Lectureship
n. கல்லுரியில் அல்லது பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பதவி.
Led
-1 n. நடத்திச் செல்லப்படுகிற, தன்செயலற்ற.
Led, v.(2), lead
-2 என்பதன் இறந்தகால முடிவெச்சம்.
Ledge
n. சுவர்ப்பக்க வரை விளிம்பு, சுவரின் பக்கத்தை ஒட்டிய ஒடுங்கிய நீள் விளிம்பு, பாறைப்பக்கப் படிவிளிம்பு, அடிநீர் முரம்பு, நீர்க்கீழ் பாறை முகடு, சுரங்க வகையில் உலோகக் கலப்புள்ள பாறைப் படலம்.
Ledger
n. கணக்குப்பதிவுத் துறையில் பேரேடு, நிலைப்பகுதி வேடு, பதிவேடு, சாரப்படிமரம், சாரங்கட்டுவதில் கட்டிடத் துடனிணைவாக உள்ள மரக்கட்டை, தட்டையான கல்லறைக் கற்பாளம், நிலையாகப் பொருத்தி வைக்கப்பட்ட தூண்டில் இரை, நிலவரத் தூதர், (பெ.) நிலவரமாயிருக்கிற.
Ledger-bait
n. நிலையாகப் பொருத்தப்பட்ட தூண்டிலிரை.
Ledger-blade
n. துணி கத்தரிக்கும் இயந்திரத்திலுள்ள நலைக்கத்தி.
Ledger-line
n. நிலையாகப் பொருத்தி வைக்கப்பட்ட தூண்டிற்கயிறு.
Lee
n. அணவுக்காப்பு, அணிமைச்சார்பினால், ஏற்படும் பாது காப்பு, காப்பணவுடைய பக்கம், காற்றுப்படாத பக்கம், காற்றுச் செல்திசை.
Lee-board
n. மிதவைத் தடைப்பலகைச் சட்டம், மரக்கலம் காற்றோட்டத்தில் இழுத்துச் செல்லப்படுவதைக் குறைக்கும் பொருட்டு அதன் காற்றெதுக்குப் பக்கத்தில் இறக்கப்படும் பலகைச் சட்டம்.
Leech
-1 n. அடடை, குருதி உறிஞ்சும் உயிரினம், ஒட்டுணி, பிறரை ஒட்டிக்கொண்டு சுரண்டிப் பிழைப்பவர்.
Leech
-2 n. கப்பற்பாயின் நிமிர்ந்த பக்கப்பகுதி, கப்பற்பாயின் சாய்ந்த பக்கப்பகுதி.
Leech
-3 n. (செய்.) மருத்துவர்.
Leek
n. வேல்ஸ் நாட்டின் தேசியச் சின்னமான வெங்காய இனச் சமையற் பூண்டுவகை.