English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Legal
a. சட்டஞ் சார்ந்த, சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட, சட்டப்படி உரியதான, சட்டத்தினால் நியமிக்கப்பட்ட, சட்டக்கட்டுப்பாட்டுக்குரிய, நேர்மைப் பொருத்தமின்றிச் சட்டப் பொருத்தத்தால் ஏற்றக்கொள்ளப்பட்ட, சட்டப்பொருத்தத்தால் எற்றுக்கொள்ளப்பட்ட, சட்டத்திற்கு உடன்பாடான, நம்பிக்கையினாலன்றி யூதர் பழைய சமயசித்தாந்தப்படி தொண்டு செய்வதுமூலமே உய்திப்பெறுவதற்குரிய.
Legalism
n. சமயசித்தாந்த வகையில் சமயநுல்களைவிடச் சட்டத்தைச் சிறப்பாக்கிகொள்ளுதல், வினைமுறைகளைக் கடைப்பிடிப்பதனால் பாவம் மன்னிக்கப்படுமென்னும் கோட்பாடு, கண்டிப்பான சட்டக் கடைப்பிடித் தன்மை, சிவப்புநாடாப் பண்பு.
Legality
n. முறைமை உடைமை, சட்டத்துக்கு ஒத்திருக்கும்படி செய்.
Legalize
v. முறைமை உடையதாக்கு, சட்டத்துக்கு ஒத்திருக்கும்படி செய்.
Legate
-1 n. போர்ப்பாண்டவருக்குப் பிரதிநிதியாக அனுப்பப்படும் சமயகுரு.
Legate
-2 v. விருப்ப ஆவண வழி உடைமை வழங்கு.
Legatee
n. விருப்ப ஆவன வழி உடைமை பெறுபவர்.
Legation
n. தூதுப்பேராட்களை அனுப்புதல், நிலைத்தூதுக்குழு, தாதுவப்பேராளர் குழு, வௌதநாட்டமைச்சுப் பரிவாரக் குழு. வௌளிநாட்டமைச்சர் உரிமைப் பணிமனையிடம்.
Legato
adv. இசைக்குழு இயக்குரை வழக்கில் ஒரே கதியில், மெத்தென, இடையீடின்றி.
Leg-bail
n. ஓடித் தப்பித்துக் கொள்ளுதல்.
Leg-bye
n. மரப்பந்தாட்ட வகையில் மட்டைக்காரரின் உடம்பில் கை தவிர எந்தப் பாகத்தை யேனும் பந்து தொடும் போது அதுகாரணமாகக் கணக்கிடப்படும் கெலிப் பெண்.
Legend
n. புராணக்கதை, மக்களால் ஆர்வமாக நம்பப்படும்மரபுவழிக் கதை, கட்டுக்கதை, புராணக்கதை இலக்கியம், பழங்கதை மரபு, நாணயங்களின் எழுத்துப் பொறிப்பு.
Legendary
n. பழங்கதைப் புத்தகம், பழங்கதைகள் எழுதுபவர், (பெ.) பழங்கதை சார்ந்த, கட்டுக் கதை அடங்கிய, புராணக் கட்டுக்கதையின் தன்மைவாய்ந்த, புனைவான, வியப்பார்வமளிக்கிற, புதுமை உணர்வூட்டுகிற.
Legendry
n. கட்டுக்கதைத்தொகுதி, கட்டுக்கதைத் துறை, கட்டுக்கதைகள்.
Legerdemain
n. செப்பிடுவித்தை, மாயமந்திரம், ஏமாற்று முறை, பசப்பேய்ப்பு, சொற்புரட்டு.
Legger
n. சுருங்கைக் கால்வாய்ச் சுவர்களை உதைத்துப் படகைச் செலுத்துபவர், காலுறை மேற்பகுதி செய்பவர், காலுறை மேற்பகுதி செய்யும் பொறிக் கருவி.
Leggings
n. pl. முழங்கால் வரையில் காப்பாக அணியும் தோலாலான புறக் குப்பாயம்.
Leg-guard
n. மரப்பந்தாட்டக்காரரின் கால் முழந்தாள்களுக்குக் காப்பளிக்கும் மெத்தை.
Leggy
a. சிறுவன்-குதிரைக்குட்டி-நாய்க்குட்டி ஆகியவற்றின் வகையில் கம்பி போன்று நீண்டு ஒடுங்கிய கால்களையுடைய.
Leghorn
n. தொப்பி முதலியவைகளில் வைக்கோலால் ஆனவரிப்பின்னல் வேலைப்பாடு, வீட்டுக்கோழி வகை.