English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Lenience, leniency
இளக்கரம், மெல்லிணக்க நயம்.
Lenient
a. கண்டிப்புக் குறைவான, இளக்காரமான, மிகுதி சலுகை காட்டுகிற, விதி-கட்டுப்பாடுகள் வகையில் தளர்த்தி விடப்பட்ட, மேல்லிணக்க நயமான, கனிவு நலமிக்க, பொறுத்துப்போகும் இனிய பாங்குடைய, தண்டனை பொறுத்துப் போகும் கடுமையற்ற, மருந்து வகையில் நோவு ஆற்றுகிற.
Leninism
n. 1ஹீ1ஹ்-ஆம் ஆண்டு நிகழ்ந்த ருசியப் புரட்சித் தலைவர் லெனின் கொண்ட பொருளாதாரக்கோட்பாடு.
Lenitive
n. நோவு ஆற்றும் மருந்து, பிணி தணிக்கும் மருந்து, (பெ.) நோவு தணிக்கிற, இதமாக்குகிற.
Lenity
n. இரக்கம், கருணை, சலுகை, தயவார்ந்த செயல்.
Leno
n. முகத்திரை-தொப்பி முதலியன செய்வதறக்கான மெல்லிய பருத்தி வலைத் துணிவகை.
Lens
n. கண்ணாடி வில்லை, வளைமுகப் பளிக்குவில்லை, இருபுற வளைமுகக் கண்ணாடிவில்லை, கண்ணிண் படிக நீர்மம் பளிக்கு நீர்மங்களுக்கிடையேயுள்ள கதிர் சிதறுக்கும் அமைவு, நிழற்படக் கருவியின் வில்லைத்தொகுதி.
Lent
-1 n. கிறித்தவ மதத்தினர் அனுசரிக்கும் நாற்பது நாள் நோன்பு, இயேசுபெருமான் பாலையிற் கழித்த நாட்களைக் கொண்டாடும் விழா.
Lent(2), v. lend
என்பதன் இறந்தகால முடிவெச்சம்.
Lenten
a. கிறித்தவ சமயத்தாரின் நாற்பது நாள் நோன்புக்குரிய, நோன்புக்கு ஏற்ற.
Lenticular
a. அவரையின விதை வடிவுடைய, வில்லை வடிவான, இரு குவிவுடைய, கண்ணின் விழிவில்லைக்குரிய.
Lentil
n. அவரையினச் செடி, அவரையின விதை.
Lentisk
n. குங்கிலிய வகைமரம்.
Lento
a. (இத்.) இசை இயக்க ஏவற்குறிப்பில் மெதுவான, (வினையடை) மெதுவாக.
Lentoid
a. கண்ணாடிவில்லை போன்ற வடிவுடைய.
Lents
n. pl. கேம்பிரிட்ஜ் பல்கைலக்கழகத்தில் நாற்பது நாள் நோன்பு நிகழும் பருவத்தில் நடைபெறும் படகு பந்தயம்.
Leo
n. சிம்மராசி, ஐந்தாவது வான்மனை.
Leonid
n. சிம்மராசியினன்று வருவதாகக் தோற்றமளிக்கும் வால்மீன்.
Leonine
-1 a. அரிமா போன்ற, சிங்கத்துக்குரிய, சிங்கங்கள் சார்ந்த.