English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Logographer
n. ஹெரோடாடஸ் என்பவருக்கு முன்னிருந்த கிரேக்க உரைநடை வரலாற்று ஆசிரியர்களுள் ஒருவர், மேமைப்பேச்சு எழுத்தாளர்.
Logography
n. சொல்லச்சு முறை.
Logogriph
n. மாற்றெழுத்துப் புதிர்.
Logos
n. 'சொல்', வாக்கீசன்.
Logotype
n. அச்சுமுறையில் இணையெழுத்து வார்ப்பு, சொற்பாள வார்ப்பு.
Logwood
n. அமெரிக்க சாய மரவகை.
Loin-cloth, n.,
அரைத்துணி.
Loins
n. pl. அரை, இடுப்பு, போலி விலா எலும்புகளுக்கும் இடுப்பு எலும்புகளுக்கும் இடைப்பட்ட பகுதி, தண்டெலும்பின் இடுப்புப்பகுதியை உட்படுத்திய இடுப்பிறைச்சி.
Loir
n. சுண்டெலிக்கும் அணிலுக்கும் இடைப்பட்ட வளைதோண்டி வாழும் கொழுத்த கொறிவிலங்கு வகை.
Loiter
v. சோம்பித்திரி, வறிதே காலந்தாழ்த்து, இடையிடையே தங்கித் திரி, அலைந்து திரிந்து பொழுது போக்கு, சுற்றித்திரி, பின்தங்கு.
Loll
v. நா வகையில் வௌதயே நீட்டித் தொங்கவிடு, சோம்பலாக நில், கிடந்துருள், சாய்ந்திரு, செயலற்ற முறையில் மேலே சாய்ந்துகிட.
Lollard
n. பதினான்காம் நூற்றாண்டில் வைகிளிப் என்பவரைப் பின்பற்றிய சமய எதிர்ப்பாளருள் ஒருவர்.
Lollipops
n. pl. இனிப்புத் தின்பண்டம், சர்க்கரையில் பெதிந்த பழப்பண்டம்.
Lollop
v. தள்ளாடு, தடுமாறி விழு, தயங்கி நட, சோம்பலோடு அருவருப்பாக நடந்து செல்.
Lombard
n. இத்தாலி நாட்டை ஆறாம் நூற்றாண்டில் கைப்பற்றியவர்களுள் ஒருவர், லம்பார்டியில் வாழ்பவர், (பெ.) இத்தாலி நாட்டை ஆறாம் நூற்றாண்டில் கைப்பற்றிய செர்மானியர்களைச் சார்ந்த, லம்பார்டி பகுதிக்குரிய.
Lombardic
a. லம்பார்டியைச் சார்ந்த, லம்பார்டி பகுதி மக்களுக்குரிய, ஹ்-13 ஆம் நூற்றாண்டுகளுக்கிடைப்பட்ட சிற்பப் பாணிக்கு உரிய, 15-16-ஆம் நூற்றாண்டுகளுக்குரிய ஓவியக்கலைப் பாணிக்கு உரிய.
Loment
n. முதிர்வுற்றபோது ஒவ்வொரு விதைக்கணுவாக வெடிக்கும் காய் நெற்றுவகை.
London clay
n. (மண்.) தென்கிழக்கு இங்கிலாந்தின் மூன்றாம் பரிவு மண்ணியற் படிவு.
London ivy
n. லண்டன் மாநர மூடுபனி.