English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Long-liver
n. நீடுவாழ்பவர்.
Longobard
n. இத்தாலி நாட்டில் கி.பி.6-ஆம் நூற்றாண்டில் படையெடுத்த செர்மானிய இனத்தவருள் ஒருவர், இத்தாலியில் லம்பார்டி பகுதிக்கு உரியவர்.
Long-playing
a. ஒலிப்பதிவுத் தட்டுவகையில் உளவரிகளின் மிகு நுட்பங் காரணமாக மிக நீடித்த பாடல்கள் அடங்கிய.
Longs and shorts
n. லத்தீன் பாவகை, (க-க.) நீளமும் குட்டையுமான பாளங்கள் மாறிமாறி வைக்கப்பட்டுள்ள நிலை.
Longshanks
n. நீண்ட காலுடைய பறவை, ஆள்காட்டுங்குருவி, பவழக்காலி.
Long-shore
a. கடற்கரையருகில் உள்ள, கடற்கரையருகில் ஊடாடுகிற, கடற்கரையோரமாக மீன் பிடிப்பவர்.
Longshore-man
n. கரையயோரப் பகுதியில் கப்பலிற் சரக்கேற்றுபவர், கடற்கரையோரமாக வேலைசெய்கிற.
Long-spun
a. சலிப்பூட்டுகிற.
Long-standing
a. நெடுங்காலமாகவுள்ள, நீடித்துநிலவுகிற.
Longstop
n. மட்டைப்பந்தாட்டத்தில் இலக்குக் காவலருக்குப் பின்னின்று அவரால் விடப்பட்ட பந்துகளைத் தடுப்பவர், (வினை) இலக்குக் காவலருக்குப் பின்னின்று அவரால் பிடிக்காமல் விடப்பிட்ட பந்துகளைத் தடு.
Long-suffering
n. சகிப்புத்தன்மை, நெடுங்காலம் தீங்குகளைப் பொறுமையோடு தாங்கியிருத்தல், (பெ.) தீங்குகளை நெடுங்காலம் பொறுத்துக்கொண்டுள்ள.
Long-term
a. நெடுங்கால எல்லையுடைய, திட்டவகையில் தொலைநாட்குறிக்கொண்ட, நீண்டகாலத்தான, குறுகிய காலத்ததல்லாத.
Long-tongued
a. வாய்நீண்ட, வாயாடியான, பிதற்றுகிற.
Longue haleine
n. pl. (பிர.) நீடரும்பணி, நீடித்த விடாமுயற்சியும் உழைப்பும் தேவைப்படும் வேலை, புத்தகப்படைப்புத் தொழில்.
Lonngitudinal
a. நீளப்பாங்கான நீட்டுப்போக்கான, நிரைகோடு சார்ந்த.
Loo
n. வட்டமேசையில் ஆடப்படும் சீட்டாட்ட வகை, சீட்டாட்டத்தில் தண்டத்தொகையைப் பொதுநிதிக்குச் செலுத்தும் நிலை, (வினை) ஆட்டத்தவறுகளுக்காகத் தண்டத்தொகைக்கு உட்படுத்து.
Looby
n. முட்டாள், அறிவிலி.
Loofah
n. உடல் தேய்ப்புக்குரிய சுரை வகையின் நெற்று.
Look
n. நோக்கு, பார்வை, நோட்டம், நோக்குந் திசை, தோற்றம், சாயல், (வினை) நோக்கு, கவனம் செலுத்து, நோட்டமிடு, உற்றுப்பார், நாடு, கவனி, பக்கமாகத்திரும்பு, கண்ணுறு, எதிர்முகமாகு, தோற்று, தோற்றமளி, போலத்தோன்று, திசையில் சாய்வுறு, திசைநாடிச் செல்வது போன்றிரு, எதிர்நோக்கு, நோக்கால் உணர்த்து, நோக்கால் தெரிவி, தேர்ந்துகாண், தேர்ந்ததாராய், கண்டறுசெய், கண்டுறுதி செய், திசைநோக்கி அமைவுறு.
Look daggers
குத்திவிடுபவர்போல நோக்கு.