சங்கீதம் 113
2 யூதா குலம் அவருக்குத் திருத்தலமாயிற்று: இஸ்ராயேல் அவரது ஆட்சிக்கு உட்பட்டது.
3 கடல் அவரைக் கண்டது@ கண்டு பின்வாங்கியது: யோர்தான் திசை திரும்பி ஓடியது.
4 மலைகள் செம்மறிகள் எனத் துள்ளின@ குன்றுகள் ஆட்டுக் குட்டிகள் போலக் குதித்தன.
5 கடலே, உனக்கென்ன நடந்தது? ஏன் பின்வாங்கினாய்? யோர்தானே, உன்கென்ன ஆயிற்று? ஏன் திசை திரும்பிச் சென்றாய்?
6 மலைகளே, நீங்கள் ஏன் செம்மறிகள் போலத் துள்ளினீர்கள்? குன்றுகளே, நீங்கள் ஏன் ஆட்டுக் குட்டிகளெனக் குதித்தீர்கள்?
7 மாநிலமே, ஆண்டவர் திருமுன் நடுநடுங்கு: யாக்கோபின் இறைவனின் திருமுன் நடுக்கமுறு!
8 கற்பாறையை நீர்க் குளமாக்க வல்லவர் அவர்: பாறையை நீரூற்றாக ஆக்க வல்லவர் அவர்.
9 எங்களுக்கன்று ஆண்டவரே, மகிமை எங்களுக்கன்று@ அது உம் பெயருக்கே உரியது: உம் இரக்கத்தையும் பிரமாணிக்கத்தையும் முன்னிட்டு மகிமை உமக்கே உரியது.
10 அவர்களுடைய கடவுள் எங்கே?" எனப் புறவினத்தார் சொல்வது ஏன்?
11 நம் இறைவனோ வானுலகில் உள்ளார்: தாம் விரும்பிய யாவும் செய்துள்ளார்.
12 அவர்களுடைய சிலைகள் வெறும் வெள்ளியும் பொன்னுமே: வெறும் மனிதக் கைவேலையே.
13 அவைகளுக்கு வாய் உண்டு, பேசுவதில்லை: கண்கள் உண்டு, பார்ப்பதில்லை.
14 செவிகள் உண்டு, கேட்பதில்லை@ நாசி உண்டு, முகர்வதில்லை.
15 கைகள் உண்டு, தொடுவதில்லை: கால்கள் உண்டு, நடப்பதில்லை@ தொண்டையிலிருந்து ஒலி எழும்புவதில்லை.
16 அவற்றைச் செய்கிறவர்களும் அவைகளுக்கு ஒப்பானவர்களே: அவற்றை நம்புகிறவர்களும் அவற்றைப் போன்றவர்களே.
17 இஸ்ராயேல் மக்களுக்கு ஆண்டவர் மீது நம்பிக்கை உண்டு: அவரே அவர்களுக்குத் துணையும் கேடயமுமாவார்.
18 ஆரோனின் குலத்தார்க்கு ஆண்டவர் மீது நம்பிக்கை உண்டு: அவரே அவர்களுக்குத் துணையும் கேடயமுமாவார்.
19 ஆண்டவரை அஞ்சுவோர்க்கு அவர் மேல் நம்பிக்கை உண்டு: அவரே அவர்களுக்குத் துணையும் கேடயமுமாவார்.
20 ஆண்டவர் நம்மை நினைவு கூர்கிறார்: நமக்குத் தம் ஆசியை அளிப்பார். இஸ்ராயேல் மக்களுக்கு ஆசியை அளிப்பார். ஆரோனின் இனத்தார்க்கு ஆசியை அளிப்பார்.
21 தமக்கு அஞ்சி நடப்போர்க்கு ஆசி அளிப்பார்: சிறியோர்க்கும் பெரியோர்க்கும் ஆசி அளிப்பார்.
22 ஆண்டவர் உங்கள் இனத்தைப் பெருகச் செய்வார்@ நீங்களும் உங்கள் மக்களும் வளரச் செய்வார்.
23 ஆண்டவரின் ஆசி பெற்றவர்கள் நீங்கள்: வானமும் வையமும் படைத்தவரே உங்களுக்கு ஆசி அளித்துள்ளார்.
24 விண்ணகமோ ஆண்டவருக்கு உரியது@ மண்ணகத்தையோ அவர் மனுமக்களுக்கு அளித்துள்ளார்.
25 இறந்தோர் ஆண்டவரைப் புகழ்வதில்லை: கீழுலகம் செல்வோரும் அவரைப் புகழ்வதில்லை.
26 உயிர் வாழும் நாமே ஆண்டவரை வாழ்த்துகின்றோம்: இன்றும் என்றும் வாழ்த்துகிறோம்.