சங்கீதம் 114
2 ஏனெனில், அவரை நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தருளினார்.
3 மரணத்தின் தளைகள் என்னை வளைத்துக் கொண்டன@ பாதாளங்களின் கண்ணிகள் என்னைப் பற்றிக்கொண்டன. கவலைக்கும் துன்பத்துக்கும் நான் ஆளானேன்.
4 நானோ ஆண்டவருடைய பெயரைக் கூவி அழைத்தேன்: ~ஓ ஆண்டவரே, என் உயிரைக் காத்தருளும்~ என்று வேண்டினேன்.
5 ஆண்டவர் கருணையும் நீதியுமுள்ளவர்: நம் இறைவன் இரக்கமுள்ளவர்.
6 எளியோரை ஆண்டவர் காக்கின்றார்: துயர் மிக்கவனான எனக்கு மீட்பளித்தார்.
7 நெஞ்சே நீ மீளவும் அமைதிகொள்: ஏனெனில் ஆண்டவர் உனக்கு நன்மை செய்தார்.
8 ஏனெனில், என் ஆன்மாவை மரணத்தினின்று விடுவித்தார்: நான் கண்ணீர் சிந்தாதபடியும் என் கால்கள் இடறி விழாதபடியும் காப்பாற்றினார்.
9 நான் ஆண்டவர் திருமுன் நடந்திடுவேன்: வாழ்வோர் நாட்டில் வாழ்ந்திடுவேன்.