Word |
English & Tamil Meaning |
---|---|
இட்டிடைஞ்சல் | iṭṭiṭaical n. <>இடு-+. 1. Trouble, affliction; துன்பம். யாதோர் இட்டிடைஞ்சலும் வாராமற் காப்பாற்றினான். (J.) 2. Adversity, straits, great want; |
இட்டிது | iṭṭitu n. <>இட்டி-மை. 1. Scantiness, slenderness; சிறிது. ஆகா றளவிட்டி தாயினும் (குறள்.478). 2. Proximity, nearness; |
இட்டிமை | iṭṭi-mai n. 1. Smallness; சிறுமை. (திவா). 2. Narrowness; |
இட்டிய | iṭṭiya adj. <>இட்டி-மை. Small; சிறிய. (ஐங்குறு.215). |
இட்டீடு | iṭṭīṭu n. <>இடு-+இடு-. Dispute; விவாதம். என்னோடே இட்டீடு கொண்டல்லது தரியாதானாய் (ஈடு, 8, 2, 6). |
இட்டீடுகொள்ளு - தல் | iṭṭīṭu-koḷḷu- v.intr. <>id.+. To speak resentfully in a dispute and thereby provoke greater irritation and retort; வார்த்தையிட்டு வார்த்தைகொள்ளுதல்.அவனுக்கு இட்டீடுகொள்ளுகைக்குப் பற்றாசு இல்லாதபடி. (ஈடு, 6,2.ப்ர). |
இட்டீறு | iṭṭīṟu n. <>id.+ இறு2-. Action proceeding from one's haughtiness or arrogance; செருக்காற் செய்யுஞ் செயல். இட்டீறிட்டு விளையாடி. (திவ்.நாய்.14. 1). |
இட்டு | iṭṭu adv. <>இடு-. 1. From, beginning with; தொடங்கி. முதலிட்டு ஐந்துபாட்டாலே (திவ்.திருவாய். 2,10.பன்னீ.ப்ர). 2. For the sake of; on account of, as in அதையிட்டு வந்தான்; காரணமாக . Colloq.; An expletive, as in செய்திட்டு; |
இட்டுக்கட்டு - தல் | iṭṭu-k-kaṭṭu- v.tr. <>id.+. 1. 1. To concoct; இல்லாதை ஏற்றிச்சொல்லுதல். Colloq. 2. To draw upon the imagination, as in writing poetry or drama; |
இட்டுக்கொடு - த்தல் | iṭṭu-k-koṭu- v.tr. <>id.+. To give over and above or extra; ஏற்றிக்கொடுத்தல். ஒன்றிரண் டிட்டுக் கொடுத்த லியல்பு (பு.வெ.1, 17). |
இட்டுக்கொண்டுபோ - தல் | iṭṭu-k-koṇṭupō- v.tr. <>id.+. To take, as a person along with oneself; கூட்டிகொண்டு செல்லுதல். Colloq. |
இட்டுப்பிரி - தல் | iṭṭu-p-piri- v.tr. <>இட்டிமை+. Akap.) To be separated from one's lady-love by only a short distance; அணிமையிற்றலைவன் பிரிதல். (கலித்.121, உரை). |
இட்டுப்பிரிவு | iṭṭu-p-pirivu n. <>id.+ பிரிவு. (Akap.) Separation by a short distance; parting of a lover to go to a place not far off; சமீபமான இடத்திற் றலைவன்பிரியும் பிரிவு. இட்டுப்பிரி விரங்கினும் (தொல்.பொ.111). |
இட்டுப்பிற - த்தல் | iṭṭu-p-piṟa- v.intr. <>இடு-+. To be born with a mission; ஒரு காரியத்திற்காகப் பிறத்தல். கைங்கரிய ஸாம்ராஜ்யத்துக்கு இட்டுப்பிறந்து. (ஈடு, 2,3.1). |
இட்டுரை - த்தல் | iṭṭurai- v.tr. <>id.+. To praise, extol, admire, value; சிறப்பித்துச் சொல்லுதல். (பு.வெ.4, 11). |
இட்டுவா[வரு] - தல் | iṭṭu-vā-, v.tr. <>id.+. 1. To fetch, as a person; அழைத்துவருதல். Colloq. 2. To give and come back; |
இட்டுறுதி | iṭṭuṟuti n. <>id.+ உறுதி. Firmness, severity, rigour; கண்டிப்பு. (W.) |
இட்டேற்றம் | iṭṭēṟṟam n. <>id.+ ஏற்று-. 1. False accusation; பொய்யாகக் குற்றஞ்சாட்டுகை. இப்படி இட்டேற்றம்பேசுவ தாகாது. Colloq. 2. Tyranny, cruelty, injustice; |
இட்டேறி | iṭṭēṟi n. <>id.+ ஏறு-. Narrow path between two fields; வயல்களினிடையே செல்லும் வரப்புப்பாதை. Loc. |
இட்டோட்டு | iṭṭōṭṭu n. <>id.+ ஓட்டு-. Vexation, trouble; அலைக்கழிவு. (J.) |
இட்டோடு | iṭṭōṭu n. <>id.+ ஓடு-. Dis-union, discord, separation; ஐக்கியமின்மை. இட்டோடு பண்ணுகிறது. (W.) |
இட - த்தல் | iṭa- 12 v. <>id. intr. 1. To be cracked, broken; பிளவுபடுதல். களிறு வழங்கலினிடந்த மண் (கூர்மபு.அந்தக.40). 2. To be stripped off, as the outer covering; 1. [M. iTa.] To dig, scoop out, hollow; 2. To force a way through, as an elephant in battle; to root up, as a hog; to gore, as a bull; 3. To dislodge, as a stone; to throw up, as clods in a furrow; 4. To fork; 5. To peel off; |
இடக்கர் 1 | iṭakkar n. <>இடக்கு. Indecent words, terms denoting things or actions too obscene to be uttered in good society; சொல்லத்தகாத சொல். |
இடக்கர் 2 | iṭakkar n. cf. இடங்கர்2. Water-pot; குடம். (பிங்). |