Word |
English & Tamil Meaning |
---|---|
இடங்கொடு - த்தல் | iṭaṅ-koṭu- v.intr. <>id.+. 1. To be indulgent or lax; to show lenience; கண்டிப்பின்றி நடக்கவிடுதல். சிறு பிள்ளைகட்கு இடங்கொடுத்தால் தலைமேலேறும். 2. To yield, give in; |
இடங்கொள்(ளு) - தல் | iṭaṅ-koḷ-, v. <>id.+. intr. 1. To spread from place to place; வியாபித்தல். இடங்கொள் சமயத்தை யெல்லாம் (திவ்.திருவாய்.5,2.4). 2. To have sufficient room; 3. To be spacious, vast, capacious; To take up one's abode in; to accept, as residence; to occupy, as one's residence; |
இடங்கோலு - தல் | iṭaṅ-kōlu-, v.intr. <>id.+. 1. To gain a footing, establish one's self in a place; ஊன்ற இடஞ்செய்துகொள்ளுதல். (W.) 2. To take preparatory measures; |
இடச்சுற்று | iṭa-c-cuṟṟu n. <>id.+. 1. Curving to the left as a line on the palm of the hand; இடப்புறமாய்ச் செல்லும் வளைவு. 2. Going from right to left; |
இடசாரி | iṭa-cāri n. <>id.+cāra. Turning or wheeling to the left, as in dancing and in military tactics; இடப்பக்கமாக வரும் நடை. |
இடஞ்சுழி | iṭa-cuḻi n. <>id.+. Curl that turns to the left, as one of the points of a horse; curves that turn to the left, as on the thumb; இடப்பக்கம் நோக்கியிருக்குஞ் சுழி. |
இடத்தகைவு | iṭa-t-takaivu n. <>id.+. Prohibition by the complainant, in the name of the king, of a defendant's leaving a prescribed area; பிரதிவாதியைக் குறிப்பிட்ட இடம் விட்டுப்போகாமல் வாதி அரசாணை சொல்லித் தடுக்கை. (சங்.அக). |
இடத்துமாடு | iṭattu-māṭu n. <>id.+. Left ox in the yoke; நுகத்தின் இடப்பக்கத்து எருது. |
இடத்தை | iṭattai n. <>id. See இடத்துமாடு. . |
இடதுகன்னம் | iṭatu-kaṉṉam n. <>id.+karṇa. (Astrol.) The 11th house from the ascendant; இலக்கினத்தின் பதினோராமிடம். (சங்.அக). |
இடதுகை | iṭatu-kai n. <>id.+. See இடக்கை1, 1. . |
இடதுகைக்காரன் | iṭatu-kai-k-kāraṉ n. <>id.+. Left-handed man; இடக்கை வழக்கமுள்ளோன். |
இடதுசெவி | iṭatu-cevi n. <>id.+. (Astrol.) The 11th house from the ascendant; இலக்கினத்தின் பதினோராமிடம். (சங்.அக). |
இடதுதொடை | iṭatu-toṭai n. <>id.+. See இடதுசெவி. (சங்.அக). |
இடந்தலைப்பாடு | iṭan-talai-p-pāṭu n. <>id.+. (Akap.) Union of lovers a second time at the same place where they first met each other; இயற்கைப்புணர்ச்சி நிகழ்ந்த இடத்தில் இரண்டாமுறை தலைவனுந் தலைவியுங் கூடுகை. (தொல்.பொ.498, உரை). |
இடந்துடி - த்தல் | iṭan-tuṭi- v. intr. <>id.+. To have twitchings on the left side, referring to the muscles of the eye and the shoulder, considered to forebode good if in women and evil if in men, the reverse being predicated of the twitchings on the right side; இடக்கண் இடத்தோள் துடித்தல். (கம்பரா.காட்சி.35). |
இடநாகம் | iṭa-nākam n. <>id.+. Incubating cobra; அடைகாக்கும் நல்ல பாம்பு. (சங்.அக). |
இடநாள் | iṭa-nāḷ n. <>id.+. (Astrol.) A technical term referring to the three nakṣatras beginning with each of the 4th, 10th, 16th or 22nd asterism for calculation; உரோகிணி, மகம், விசாகம், திருவோணம், முதலாக மும்மூன்று நக்ஷத்திரங்கள். (விதான.காலசக்.2). |
இடநிலைப்பாலை | iṭa-nilai-p-pālai n. <>id.+. (Mus.) A class of ancient melody-types; பண்வகை. (சிலப்.10. கட்டுரை.14). |
இடப்படி | iṭappaṭi n. <>இடப்பு+அடி. Length of a step, pace; ஓர் அடிவைப்பு. |
இடப்பு | iṭappu n. <>இட-. 1. Large cleft, gap; பிளப்பு. 2. Clod of earth thrown out by digging or ploughing; |
இடப்புக்கால் | iṭappu-k-kāl n. <>id.+. Legs spread apart; அகலவைத்த கால். (W.) |
இடப்புறம் | iṭa-p-puṟam n. <>இடம்+. Left side; இடது பக்கம். |
இடப்பெயர் | iṭa-p-peyar n. <>id.+. (Gram.) Noun denoting place; இடத்தைக் குறிக்கும் பெயர்ச்சொல். (நன்.132). |
இடப்பொருள் | iṭa-p-poruḷ n. <>id.+. (Gram.) Sense of the locative; ஏழாம்வேற்றுமைப் பொருள். (நன்.302). |