Word |
English & Tamil Meaning |
---|---|
இடமானம் 2 | iṭamāṉam n. <>T. damāramu. Double drum carried on the back of an animal; பறைவகை. (திருநெல்.பு.விட்டுணு.25). |
இடமிடைஞ்சல் | iṭam-iṭaical n. <>இடம்+இடைஞ்சல். Lack of room; crowdedness for want of space; scanty, cramped space; நெருக்கடி. Loc. |
இடமுடங்கு | iṭamuṭaṅku n. <>id.+. See இடமிடைஞ்சல். . |
இடர் | iṭar n. <>இடு-. [T. edaru, K. idaru, M. idar.] 1. Affliction, distress, trouble; வருத்தம். என்கணிடரினும் பெரிதாலெவ்வம் (பு.வெ.11, 7). 2. Poverty, pinch of poverty; |
இடர்ப்படு - தல் | iṭar-p-paṭu- v.intr. <>இடர்+. 1. To suffer affliction; வருத்தமுறுதல். 2. To labour hard; to put forth considerable effort, as in straining the sense of a passage; |
இடர்ப்பாடு | iṭar-p-pāṭu n. <>id.+. Experiencing affliction or a reverse of fortune; துன்புறுகை. இடுக்க ணிடர்ப்பாடுடைத்து (குறள், 624). |
இடர்ப்பில்லம் | iṭar-p-pillam n. <>id.+ pilla. Curable kind of blear-eye; கண்ணோய் வகை. (ஜீவரட்). |
இடரெட்டு | iṭar-eṭṭu n. <>id.+. Eight forms of affliction that may befall a country; நாட்டிற்கு வரக்கூடிய எண்வகைத் தீமை. இடரெட்டாவன-விட்டில் கிளி நால்வாய் வேற்றரசு தன்னரசு, நட்டம் பெரும்பெயல் காற் றெட்டு (பு.வெ.9. 17, உரை). |
இடலம் | iṭalam n. <>இடு-. [T. vedalupu.] Width, extent; விசாலம். இடலமாகிய ரத்தகடல் (இரமாநதா.யுத்த.89). |
இடலை | iṭalai n. Wild olive, m.tr., Olea dioica; மரவகை. (L.) |
இடவகம் | iṭavakam n. 1. Gum of the mango or the palmyra tree; மாபனைகளின் பிசின். (W.) 2. Clove-tree. See இலவங்கம். |
இடவகை | iṭa-vakai n. <>இடம்+. House; வீடு. (பிங்). |
இடவயின் | iṭa-vayiṉ part. <>id.+. At, in; இடத்து. ஒல்லா ரிடவயின் (தொல்.பொ.76). |
இடவழு | iṭa-vaḻu n. <>id.+. (Gram.) A solecism consisting in the wrong use of one person for another; தன்மை முதலிய மூகையிடங்களைப் பிறழக்கூறுகை. (நன்.375). |
இடவன் 1 | iṭavaṉ n. <>இட்-. Cold, lump of earth; மண்ணாங்கட்டி. எந்தை யிடவனெழ வாங்கி யெடுத்த மலை. (திவ்.பெரியாழ்.3, 5, 5). (J.) |
இடவன் 2 | iṭavaṉ n. <>இடம். 1. Left ox in the yoke; நுகத்தில் இடப்பக்கத்து மாடு. 2. Fellow or mate in a yoke of oxen; |
இடவாகுபெயர் | iṭa-v-āku-peyar n. <>id.+. (Rhet.) That kind of metonymy wherein the name of the container is used for the name of the thing contained, as ஊர் அடங்கிற்று; இடப்பெயர் அவ்விடத்துள்ள பொருளுக்கு ஆகுவது. (நன்.290, உரை). |
இடவிய | iṭaviya adj. <>id. 1. Wide, extensive, spacious; விசாலமுள்ள. இடவிய வறை நின்று (தணிகைப்பு.வீராட்.65). 2. Quick, swift; 3. Adjoined, attached; |
இடவை | iṭavai n. prob. இடம். Way; வழி. (பிங்). |
இடவோட்டம் | iṭa-v-ōṭṭam n. <>இடம்+. 1. Retrograde motion of the lunar nodes, irāku and kētu; இராகு கேதுக்களின் இடப்புறமாகச் செல்லும் நடை. (W.) 2. See இடநாள். |
இடவோட்டுநாள் | iṭa-v-ōṭṭu-nāḷ n. <>id.+. (Astrol.) See இடநாள். (சோதிட. சிந். 155.) |
இடற்சம் | iṭaṟcam n. Black dammer tree. See குக்கில் (மூ.அ). |
இடறல் | iṭaṟal n. <>இடறு-. 1. Stumbling; கால்தடுக்குகை. 2. Obstacle, impediment; 3. Scandal; |
இடறு 1 - தல் | iṭaṟu- 5 v. [K.M. idaṟu.] intr. 1. To stumble, strike one's foot against; கால் தடுக்குதல். இடறின காலிலேயே இடறுகிறது. 2. To be afflicted, troubled; 1. To strike against, kick; to kick off, as the elephant does the head of a criminal; 2. To transgress; 3. To wound, 4. To obstruct, hinder; |
இடறு 2 | iṭaṟu n. <>இடறு-. Obstacle, barrier, impediment, hindrance; தடை. (W.) |
இடறுகட்டை | iṭaṟu-kaṭṭai n. <>id.+. Stumbling block, hindrance, obstruction; தடையாயிருப்பது. தாய்மாராகிற இடறு கட்டைகளாலே (திவ்.திருநெடுந்.21, வ்யா.பக்.180). |
இடன் 1 | iṭaṉ n. <>இடம். 1. Wide space; அகலம். இடனுடைவரைப்பு. (பொருந.65). 2. Auspicious time, good time; |