Word |
English & Tamil Meaning |
---|---|
இடி 3 | iṭi n. <>இடி2-. [M. idi.] 1. Stroke, blow, push; தாக்கு. உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி. 2. Flour, esp. of rice or millet; 3. Light meal with flour as its chief ingredient; 4. Powder, dust, anything pulverised; 5. Thunder; 6. Roar-great noise; 7. Rebuke, reproof; 8. Ache, throbbing pain; |
இடிக்கொடியோன் | iṭi-k-koṭiyōṉ n. <>இடி+. Indra so called as he has the thunderbolt on his banner; இந்திரன். |
இடிக்கொள்ளு | iṭi-k-koḷḷu n. Black horse-gram, Cassia absuus; காட்டுக்கொள். |
இடிகம் | iṭikam n. Indian birthwort. See பெருமருந்து. (மலை). |
இடிகரை | iṭi-karai n. <>இடி1-+. Eroded bank, as of a river; ஆறுமுதலியற்றின் அழிந்த கரை. ஆக்கயெனு மிடிகரையை (தாயு.சின்மயா.2). |
இடிகிணறு | iṭi-kiṇaṟu n. <>id.+. Dilapidated well; இடிந்து விழுநிலையிலுள்ள கிணறு. |
இடிசல் | iṭical n. <>id. Grain bruised in pounding; நொறுங்கின தானியம். Colloq. |
இடிசாமம் 1 | iṭi-cāmam n. <>id.+yāma. Evil hour; கெடுகாலம். (W.) |
இடிசாமம் 2 | iṭi-cāmam n. prob. இடு-+ šāpa. Defamation, reproach நிந்தை. (W.) |
இடிசுவர் | iṭi-cuvar n. <>இடி2-+. Ruined wall; இடிந்தசுவர். |
இடிஞ்சில் | iṭicil n. prob. இடு-. The hollow portion of a lamp, which is the receptacle for the oil; விளக்குத்தகழி. உடலெனு மிடிஞ்சி றன்னில் நெய்யமர் திரியுமாகி (தேவா.503, 2). |
இடித்தடு | iṭittaṭu n. <>இடித்து+அடு2-. A loose confectionary made of flour; பிட்டு. நரைத்தலை முதியோ ளிடித்தடு கூலிகொண்டு (கல்லா.46). |
இடித்துரை | iṭitturai n. <>id.+ உரை-. Admonition, expostulation; criticism, at once kind and severe; கழறிக்கூறுஞ் சொல். |
இடிதாங்கி | iṭi-tāṅki n. <>இடி+. Lightning rod; lightning conductor; கட்டடத்தின்மீது இடி விழாதபடி காக்க வைகுங் காந்தக்கம்பி. |
இடிப்பணி | iṭippaṇi n. <>ṭippaṇī. Gloss, comment; குறிப்புரை. (இலக்.அக). |
இடிப்பு | iṭippu n. <>இடி2-. 1. Thunder; இடி இடிப்பெனவார்த்து (கந்தபு.சிங்கமு.431). 2. Noise, clangour; |
இடிபடு - தல் | iṭi-paṭu- v.intr. <>id.+ 1. To be pushed about, elbowed; தாக்கப்படுதல். 2. To be comminuted, as rice; 3. To crackle, as fire; 4. To be vexed or harried; |
இடிம்பன் | iṭimpaṉ n. <>Hidimba. Name of a Rākṣasa who was slain by Bhīma; வீமனாற் கொல்லப்பட்ட ஓர் அரகக்ன். (பாரத.வேந்திர.16) Also இடும்பம். |
இடிம்பை | iṭimpai n. <>Hidimbā. Name of Hidimbā's sister, who married Bhīma; வீமன் மனைவியாகிய அரக்கி (பாரத.வேந்திர.9). |
இடிமயிர் | iṭi-mayir n. <>இடு-+. False hair, usually obtained from the tail of the yak; சவரி. Loc. |
இடிமரம் | iṭi-maram n. <>இடி2-+. 1. Pestle; உலக்கை. (W.) 2. Heavy wooden rammer in a frame, worked by a pedal and used for pounding parched rice into flakes; |
இடிமருந்து | iṭi-maruntu n. <>id.+. Medicinal preparation of drugs pounded together; சூரணமருந்து. (W.) |
இடிமுழக்கம் | iṭi-muḻakkam n. <>இடி+. Thunderclap; இடியொலி. |
இடியப்பம் | iṭi-y-appam n. <>இடி1-+. [M. idiyappam.] Steamed rice-cake pressed through a perforated mould and resembling vermicelli; சிற்றுண்டி வகை. |
இடியல் | iṭiyal n. <>id. A loose confectionary made of flour; பிட்டு. இடியலினுணவு. (குமர.பிர.காசிக்.4). |
இடியாப்பம் | iṭi-y-āppam n. Vul. for இடியப்பம். . |
இடியேறு | iṭi-y-ēṟu n. <>இடி+. Thunderbolt; பேரிடி. (திவா.). |
இடிவிழு - தல் | iṭi-viḻu- v.intr. <>id.+. To strike, as lightning; to fall with a crash, as a thunderbolt. அடிவயிற்றில் இடி விழுந்தார்போல. |
இடிவு | iṭivu n. <>இடி1-. 1. Decay, destruction; அழிவு. இடிவில் பெருஞ்செல்வம் (தேவா.707. 6). 2. Crumbling down, as of an undermined bank; |
இடு - தல் | iṭu- 6 v. [T.K.M. Tu. idu.] tr. 1. To place, deposit, put in, keep; வைத்தல். காயத்திடுவாய் (திருவாச.33, 8). 2. To throw, cast away; 3. To serve, distribute; 4. To give, grant, bestow, as alms; 5. To pour, shower, as rain; 6. To hit against, thrust in; 7. To put on, as a bangle on one's wrist; 8. To compare; 9. To give, as a name to a new-born child; to assign; 10. To charge; to incriminate by laying a false charge against; 11. To draw, as a figure; 12. To yield, generate; 13. To lay, as an egg; 14. To forsake, desert; 15. To bury; 16. To form or fashion; to mould, as cakes; 17. To discharge, as arrows; 18. To do; 19. To begin; 20. To cut off; 21. Auxiliary of verbs which become vbl. pple. of the past tense before it; |