Word |
English & Tamil Meaning |
---|---|
வியாவர்த்தனீயம் | viyāvarttaṉīyam n. <>vyāvarttanīya. (Log.) That which can be split up; அவச்சேத்தியம். (விசாரசந். 321.) |
வியாவிருத்தஸ்வபாவம் | viyāvirutta-svapāvam n. <>vyāvrtta+. Acquired characteristics; செயற்கைக் குணம். ஸ்வர்ண மென்னும் வஸ்துவில் . . . வட்டு, முடி, கடகாதிகள் வியாவிருத்தஸ்வபாவம் (நீலகேசி, 380, உரை). |
வியானம் | viyāṉam n. <>yāna. Conveyance, vehicle; ஊர்தி. வியான முதலாயினவின்றி (நீலகேசி. 115, உரை). |
வியோமன் | viyōmaṉ n. <>vyōman. God; தேவன். வித்தக விவேசன வியோமரை விசித்தே (இரக்ஷணிய. பக். 48). |
விரல்கொடு - த்தல் | viral-koṭu- v. intr. <>விரல்+. To marry; பாணிக்கிரகணஞ் செய்தல். வேசியவள் நானிருக்க விரல்கொடுத்தா ளாகையென்ன (கோவ. க. 33). |
விராசம் | virācam n. <>virāj. Lustre; ஒளி. பத்மவிராசபாதனை (பாடு. 23, 9). |
விராலிச்சம்பா | virāli-c-campā n. A kind of campā paddy; சம்பாநெல்வகை. (விவசா. 1.) |
விரியோலை | viri-y-ōlai n. <>விரி-+. Olaumbrella; தாழங்குடை. வர்ஷாதப பரிஹாரமான விரியோலையும் (திவ். பெரியாழ். 3, 3, 4, வ்யா. பக். 569). |
விருத்தநடை | virutta-naṭai n. <>விருத்தம்+. Concluding verse in a meter different from that of the carukkam; வேற்றிசைப்பா. (திவா.) |
விருதெழுத்து | viruteḻuttu n. <>விருது+. Motto. See காரணவாக்கியம். Pond. |
விரேசனம் | virēcaṉam n. <>vi-rēcana. Expulsion; வெளியாக்குகை. மனதினின்று சுய நயத்தை விரேசனம் செய்து (நி¢த்தியா. 13). |
வில் | vil n. A bow like musical instrument; வில்வடிவிலுள்ள வாத்தியவகை. பாடுகின்ற வில்லா முரசாம் (தெய்வச். விறலிவிடு. 397). |
வில்லடிக்குறி | vil-l-aṭi-k-kuṟi n. <>வில்+ அடி+. Rainbow, as portending rain; மழை பெய்தற்கு அறிகுறியாகிய வானவில். (தஞ். சர. i, 311). |
வில்லுப்பாட்டு | villu-p-pāṭṭu n. <>id.+. Song sung of the accompaniment of a vil, in koṭai festival, etc.; கொடைவிழா முதலியவற்றில் வில்லடித்துப் பாடும் பாட்டு. Tinn. |
வில்லை | villai n. Round slice; வட்டமான துண்டு. கைக்கரும்பை வில்லைசெய்யக் காணேனான் (அழகியநம்பியுலா, 148). |
வில்வளைவு | vil-vaḷaivu n. <>வில்+. Bow-shaped arch, as in a building; கட்டடத்தில் விற்போன்ற வளைவு. Pond. |
விலங்கடி - த்தல் | vilaṅkaṭi- v. tr. <>விலங்கு+. To bind with fetters; விலங்கு மாட்டுதல் இருகால் விலங்கடியா தேவிடில் (பஞ்ச. திருமுக. 1658). |
விலங்கு | vilaṅku n. Body, as fettering the soul; உடல். (திவ். திருச்சந். 56, வ்யா. பக். 162.) |
விலங்குகதி | vilaṅku-kati n. <>விலங்கு+. (Buddh.) One of ṣaṭ-kati, q v .; ஷட்கதியுளொன்று. |
விலாக்குறிப்பு | vilā-k-kuṟippu n. <>விலா+. Marginal note; புஸ்தகப் பக்கங்களில் ஓரத்திலிடுங் குறிப்பு. Mod. |
விலாவொடி - த்தல் | vilā-v-oṭi- v. tr. <>id.+. 1. To exact hard work from; கடுமையாக வேலைவாங்குதல். 2. To cause side-splitting laughter; |
விலைக்கழிவு | vilai-k-kaḻivu n. <>விலை+. Discount in sale price; வாங்கின விலையில் தள்ளுபடியாவது. Mod. |
விலைத்தரவு | vilai-t-taravu n. <>id.+. Sale deed; கிரயசாசனம். (S. I. I. viii, 357.) |
விவாகப்பிரிப்பு | vivāka-p-piruppu n. <>விவாகம்.+. See விவாகரத்து. Pond. . |
விவாகமோசனம் | vivāka-mōcaṉam n. <>id.+. See விவாகரத்து. Pond. . |
விவாகரத்து | vivāka-rattu n. <>id+. Divorce; கணவனுக்கும் மனைவிக்குமுள்ள தாம்பத்திய சம்பந்தத்தின் நீக்கம். Mod. |
விவாசனம் | vivācaṉam n. <>vi-vāsana. Expatriation; externment; நாடு கடத்துகை. Pond. |
விவாதி | vivāti n. <>vi-vādin. Complainant, plaintiff; பிராது செய்பவன். Pond. |
விவாதி - த்தல் | vivāti- 11 v. tr. To dispute; வாதித்தல். விவாதிக்கும்பேரை மருட்டுகிறீர் (சர்வசமய. 188). |
விழவி | viḻavi n. A plant; பூடுவகை. ஒரு பிடி விழவியிலையும் (தஞ். சர. ii, 290). |