English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ashkenazim
n.pl. போலந்து-செர்மனி நாடுகளிலுள்ள யூதர்கள்.
Ashlar
n. மேவுகல், செங்கல் போலச் சதுக்கமாகச் செதுக்கப்பட்ட கட்டுமானக்கல், (பெ.) மேவு கல்லாலான, (வினை.) மேவுகல் கட்டி யணைகொடு.
Ashlaring
n. மேவடை, மோட்டு மச்சின் கோண் இடைவௌதகளை அடைத்து மறைக்கும் செங்குத்தான பலகைத்தட்டி.
Ashlar-work
n. மேவுகற் கட்டுமானவேலை.
Ash-leach
n. காரச்செய்தொட்டி, கட்டைச்சாம்பலைக் கரைத்துக்கார உப்புக்களைப் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்படும் தொட்டி.
Ash-leaf
n. முன்பருவ விளைச்சலுக்குரிய உருளைக்கிழங்குப்பயிர்.
Ashore
adv. கரைமீது, கரையில், கரைக்கு, கரைநோக்கி.
Ash-pan
n. அடுப்பின் அழித்தகட்டிலிருந்து விழும் சாம்பல் படியும் அடித்தட்டு.
Ashplant
n. அசோக மரத்தின்தை, தேவதாகு மரவகையின் இளங்கன்று.
Ash-stand
n. படிவலத்தட்டு, புகைச்சுருள் நீறு படிவதற்காக மேசை மீது வைக்கப்படும் தட்டு.
Ash-Wednesday
n. கிறித்தவ ஆட்டை நோன்புப் பருவத்தின் முழ்ல் நாள் நீற்றுப்புதன்கிழமை.
Ashy
a. சாம்பலுக்குரிய, நீறுபூத்த, சாம்பல் போர்த்த, சாம்பல் படிந்த, சாம்பல் நிறமான.
Ashy-grey
a. சாம்பல் நிறமான.
Asian
n. ஆசியாக் கண்டத்தவர், (பெ.) ஆசியா கண்டத்துக்குரிய, ஆசிய நாடுகளுக்குரிய, சிறிய ஆசியாவுக்கு உரிய, ஆசிய மரபுக்குரிய, பகட்டணிநிறைந்த இலக்கியப் பண்புடைய.
Asianic
a. ஆசியாக்கண்டத்துக்குரிய, சிறிய ஆசியாவுக்கு உரிய, ஆசிய மரபுசார்ந்த, (மொழி.) ஆசியா ஐரோப்பாக் கண்டங்களிலுள்ள இந்தோ-செர்மானிய இனமல்லா மொழிக்குழுவுக்குரிய.
Asiatic
n. ஆசியாக் கண்டத்தவர், (பெ.) ஆசியாக் கண்டத்தைச் சார்ந்த.
Asiaticism
n. ஆசிய நடையுடை, மரபுகளைப் பின்பற்றி நடக்கும் பண்பு.
Aside
n. பிறர் கேளாதபடி மெல்லிய குரலிற் பேசப்படும் சொல், நடிகர் தனிமொழி, (வினையடை.) விலகி, ஒதுங்கி, ஒருபக்கமாக, தள்ளி, அப்பால், மறைவாக, தனிமையில்,.
Asinine
a. கழுதைக்கு உரிய, கழுதை போன்ற, அறிவுக்குறைவான.
Asininity
n. கழுதை போன்ற தன்மை, அறிவு மழுங்கல், முரண்டு.