English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Assart
n. காடுவெட்டி உருவான நிலம், காடு கொன்று நாடாக்குதல், (வினை.) காடு அழித்துப் பாசன நிலமாக்கு.
Assassin
n. கொலையாளி, கொலைகாரர், மறைந்திருந்து கொலை செய்பவர்.
Assassinate
v. படுகொலை செய், மறைந்திருந்து தாக்கிக் கொல்லு, வஞ்சகமாகக் கொல்லு.
Assassination
n. படுகொலை, சதிக்கொலை, தாக்கிக் கொல்லுதல்.
Assassinator
n. படுகொலை செய்பவர், சதிகாரக்கொலைஞர், கொலைகாரர்.
Assault
n. திடீர்தாக்குதல், மேற்சென்றெதிர்த்தல், முற்றுகை, மோதுதல், (சட்.) வலிந்து தாக்குதல், வசைத்தாக்கு, (வினை.) தாக்கு, முற்றுகைசெய், வலிந்து எதிர், வசைகொண்டு தாக்கு.
Assay
n. தேர்வு, நோட்டம், எடைபண்பு மதிப்பீடு, தேர்வுக்குரிய உலோகம், முயற்சி அனுபவம், (வினை,) ஆராய்ந்து பார், நோட்டம்பார், எடைபண்புநேர், கலவை அளவு மதிப்பிடு, முயற்சிசெய், முயன்றுபார்.
Assayable
a. மதிப்பிடக்கூடிய, முயற்சிக்குரிய.
Assayer
n. நோட்டக்காரர், பொன்காண் கட்டளையர்.
Assay-master
n. கட்டளை வல்லுநர், நோட்டவல்லுநர்.
Assay-piece
n. மச்சப்பொன், மேன்மைக்கு எடுத்துக்காட்டு.
Assemblage
n. ஒன்றுகூடுதல், கூட்டம், மக்கட்குழாய், தொகுதி.
Assemble
-2 v. ஒன்றுகூட்டு, திரட்டு, உறுப்புக்களை ஒன்று கூட்டிச்சேர், ஒன்றுகூடு.
Assemble,
-1 n. குழு நடனத்திற் பாய்ச்சல் வகை.
Assembly
n. ஒருங்குகூடுதல், திரட்டுதல், சட்டம் இயற்றும் பேரவை, மக்கள் மன்றம்.
Assembly-man
n. பேரவை உறுப்பினர்.
Assembly-room
n. பொதுநடனக் கூடம்.
Assembly-shop
n. இயந்திரக்கருவிகள் இணைத்துப்பூட்டப்படும் இடம்.
Assent
n. இசைவு, (வினை.) இணங்கு, இசைவினைத் தெரிவி.