English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Acrilan
n. செயற்கைக் கம்பளிவகைக்கு இடப்பட்டபெயர்.
Acrimonious
a. எரிச்சலான.
Acrimony
n. எரிச்சல், காரம், உறைப்பு, மனக்கசப்பு.
Acrita
n. தௌதவான நரம்பு அமைப்பற்ற விலங்கினம்.
Acroamatic, acroamatical
a. வாய் மொழியான, எழுத்தில்வராத, மறையுரையான.
Acrobat
n. கழைக்கூத்தாடி, வேழம்பர், அரசியல் செப்பிடு வித்தையாளர்.
Acrobatic
a. கழைக் கூத்தாடிக்குரிய, குட்டிக்கரணம் இடுகிற.
Acrobatics
n. செப்பிடு வித்தை, களரி விளையாட்டுகள்.
Acrobatism
n. சிலம்பக் கலை, கழைக்கூத்தாடி வித்தை.
Acrogen
n. நுனியில் வளர்முகமுடைய குறிமறைஇனம்.
Acrolith
n. கற்பூண் இட்ட சிலை, தலைகைகால்கள் மட்டும் கல்லாலான கலையுருவம்.
Acronycal, acronychal
a. மாலை அல்லது முன்னிரவுக்குரிய, கங்குலின் முற்பகுதியில் எழுகிற அல்லது விழுகிற.
Acronym
n. தலைப் பெழுத்துச்சொல், சொற்களின் முதலெழுத்துக்களைத் தொகுத்து உருவாக்கப்படும் புதுச்சொல்.
Acropetal
a. முகடு நோக்கிய.
Acrophony
n. முதலொலி எழுத்துமுறை, சொற்களின் முதல் அசைஅல்லது எழுத்து அல்லது ஒலி படக்குறியீடுகளால் குறிக்கப்படும் முறை.
Acropolis
n. நகரின் உள்ளரண், ஆதென்ஸ் நகரத்தின் உள்ளரண்.
Across
குறுக்காக, கடந்து.
Acrostic
n. கரந்துறை பாட்டு, வரிகளின் முதலெழுத்தை அல்லது கடையெழுத்க கூட்டுதலால் சொல்லுண்டாகும் பாட்டுவகை அல்லது புதிர்வகை.
Acrotism
n. நாடித் துடிப்பின்மை.
Act
n. செயல், வினை, நாடகக் காட்சி, வேடிக்கைக்காட்சி, காட்சிப்பகுதி, அங்கம், சட்டம், சிறு பிரார்த்தனை, (வினை) செய், செயல்புரி, நடி, விளைவு உண்டாக்கு, பதிலாக வேலைசெய், மாற்றாள் வேலைபார்.